இனி சிவகார்த்திகேயன் Vs கவின் தானா? டிரைலரில் இருந்தே மோதல் ஆரம்பம்! விஜய் இடம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இனி சிவகார்த்திகேயன் Vs கவின் தானா? டிரைலரில் இருந்தே மோதல் ஆரம்பம்! விஜய் இடம் யாருக்கு?

இனி சிவகார்த்திகேயன் Vs கவின் தானா? டிரைலரில் இருந்தே மோதல் ஆரம்பம்! விஜய் இடம் யாருக்கு?

Suguna Devi P HT Tamil
Updated Oct 18, 2024 01:53 PM IST

தமிழ் சினிமாவில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் தொடங்கி முன்னணி ஹீரோக்கள் இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டி போடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 80 களின் காலக்கட்டத்தில் ரஜினி மற்றும் கமல் ஹாசனின் படங்களுக்கு இடையே போட்டி நிலவியது.

இனி சிவகார்த்திகேயன் Vs கவின் தானா? டிரைலரில் இருந்தே மோதல் ஆரம்பம்! விஜய் இடம் யாருக்கு?
இனி சிவகார்த்திகேயன் Vs கவின் தானா? டிரைலரில் இருந்தே மோதல் ஆரம்பம்! விஜய் இடம் யாருக்கு?

தொடர் போட்டிகள் 

முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஒரே நாளில் இருவரின் படத்தை வெளியிட்டு பலப்பரீட்சை நடத்துகின்றனர். ரஜினி,கமலைத் தொடர்ந்து விஜய் மற்றும் அஜீத் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியதாக கூறப்பட்டது. வித்தியாசமான கதை, கதாபாத்திரம் எனத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சூர்யா மற்றும் விக்ரம் இருவருக்கும் இடையேயும் போட்டி இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் கோலிவுட்டின் அடுத்த போட்டியினை ரசிகர்கள் ஆரம்பித்து விட்டனர். 

அமரன் ஆடியோ வெளியீடு 

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 18) நடக்க உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே படத்தின் ட்ரைலரும் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

பிளடி பெக்கர் 

நடிகர் கவின் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் பிளடி பெக்கர் திரைப்படமும் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரித்து உள்ளார். இப்படத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. 

சிவகார்த்திகேயன் Vs கவின் 

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வந்த நீயா! நானா! போட்டியை சிவகார்த்திகேயன் ரசிகர்களும், கவினின் ரசிகர்களும் தொடர ஆரம்பித்துள்ளனர். முன்னதாக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கவினின் உடல் மொழி அசலாக விஜயை போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வந்தனர். மேலும் தி கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்த சிவ கார்த்திகேயன் அடுத்த தளபதியாக போகிறார் எனவும் பரவலாக பேசப்பட்டது.   

இந்நிலையில் தளபதி விஜய் அரசியலுக்கு செல்வதால் இனி படத்தில் நடிக்கப் போவது இல்லை எனவும் தெரிவித்து இருந்தார். தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாகவும், சிறந்த எண்டர்டைனராகவும் இருந்து வரும் விஜய் திரைத் துறையை விட்டு சென்றால் பெரும் வெற்றிடம் உருவாகும். அந்த இடத்தை யார் நிரப்புவது என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது எனக் கூறலாம். கிட்டத்தட்ட சிறந்த நடிகர்களாக வலம் வரும் கவின் மற்றும் சிவகார்த்திகேயன் இந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர் பார்க்கப்படுகிறது. கூடுதலாக இருவரும் விஜய் டிவியில் இருந்து திரைக்கு வந்தவர்கள் என்ற ஒரு ஒற்றுமையும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் விஜயின் இடம் யாருக்கு என.