Lokesh Kanagaraj: ‘லியோ ஃப்ளாப் ஆனா அடுத்த 3 மாசத்துல..’ - லோகேஷ் கனகராஜ் பளார் பேட்டி!
லியோ திரைப்படம் ஃப்ளாப் ஆனால் தான் என்ன செய்வேன் என்று லோகேஷ் கனகராஜ் பேசி இருக்கிறார்.ச்
இது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசும் போது, “ ஒரு போட்டியில் கலந்து பரிசுகளை வாங்குபவர்களை விடுங்கள். அந்தப்போட்டியில் கலந்து கொண்டாலே போதும் என்று நினைப்பவன் நான். அந்த அழுத்தம் கூட வேண்டாம் என்றுதான் இருந்தேன்.
பாக்ஸ் ஆஃபிஸ் நம்பர் கேமில் நான் நுழையாததிற்கான காரணம், இங்கு பல பிரச்சினை யார் பெரியவன் என்பதில்தான் வருகிறது. அதில் நான் என்னை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று பார்க்கிறேன். எனக்கு என்னுடைய தோல்வி மீது ஏன் பயம் வரும் என்றால், இதில் நிறைய பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். என்னுடய தோல்வி அவர்களையும் பாதிக்கும்.
அதை உணரும் போது மட்டும்தான் அழுத்தம் என்பதை உணர்வேன். நான் இந்தப்படத்தில் தோற்றுப்போனால் கூட, அடுத்த 3 மாதத்தில் நான் வேலை செய்து நான் விட்ட இடத்தை பிடித்து விடுவேன்.” என்று பேசினார்.
முன்னதாக, விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு, விஜயுடன் ஜோடியாக சேர்ந்து இருக்கிறார் நடிகை த்ரிஷா.
இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது. இந்தப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர், புரமோ வீடியோ, பாடல்கள் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தத்திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதியன்று வெளியாக இருக்கிறது.
நன்றி: கோபிநாத்!
டாபிக்ஸ்