Lokesh Kanagaraj: ‘இங்கேயும் இரத்தமா..?’ - நண்பருக்காக களத்தில் இறங்கிய லோகேஷ்! - ஃபர்ஸ்ட் லுக் எப்போது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lokesh Kanagaraj: ‘இங்கேயும் இரத்தமா..?’ - நண்பருக்காக களத்தில் இறங்கிய லோகேஷ்! - ஃபர்ஸ்ட் லுக் எப்போது?

Lokesh Kanagaraj: ‘இங்கேயும் இரத்தமா..?’ - நண்பருக்காக களத்தில் இறங்கிய லோகேஷ்! - ஃபர்ஸ்ட் லுக் எப்போது?

Kalyani Pandiyan S HT Tamil
Nov 28, 2023 07:59 PM IST

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ்!

அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்கப்போகும் பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் லோகேஷ் நேற்றைய தினம் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறி, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், முதற்கட்டமாக இயக்குரும் நடிகருமான விஜயகுமார் மற்றும் குழுவை வைத்து, திரைப்படம் தயாரிக்க இருப்பதாகவும், அதன் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்து இருக்கிறார்.

‘உறியடி’ திரைப்படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் விஜய் குமார். இந்தப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து இவர் எடுத்த உறியடி இரண்டாம் பாகம் பெரிதான வரவேற்பை பெறவில்லை. இதனிடையே, சூரரைப்போற்று திரைப்படத்தில் வசனங்கள் எழுதினார் விஜய் குமார்.

இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் அவர் திரைப்படம் இயக்க இருக்கிறார்.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கையில், “ 5 படங்களை டைரக்ட் செய்திருக்கும் நான், அடுத்ததாக ‘G squad’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். முதற்கட்டமாக என்னுடைய நண்பர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோரின் ஐடியாக்களை படமாக எடுக்க இருக்கிறேன். உங்களுடைய ஆதரவை வழக்கம் போல தர வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.