December Tamil movies 2022: ஆண்டு இறுதியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு இறுதியாக டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ராங்கி
எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்து இருக்கும் படம், ராங்கி. ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் த்ரிஷா மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது.
நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ள இப்படம் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
டிரைவர் ஜமுனா
வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம், ' டிரைவர் ஜமுனா '.
இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.
படம் வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்து இருந்தனர். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இறுதியாக டிரைவர் ஜமுனா படம் இந்த ஆண்டு கடைசி வெள்ளிக்கிழமையான (டிசம்பர் 30 ) வெளியாகிறது.
செம்பி
மைனா, கும்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமான் இயக்கத்தில் தற்போது இயக்கி இருக்கும் படம், செம்பி. இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர். என்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்த படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ஓ மை கோஸ்ட்
சிந்தனை செய் பட இயக்குநர் ஆர் யுவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ஓ மை கோஸ்ட். படத்தில் யோகி பாபு, சதீஷ், தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். அதே போல் டிக் டாக் ஸ்டாரான ஜி.பி . முத்துவும் படத்தில் நடித்து உள்ளார்.
ஹாரர், ஆக்ஷன், காமெடி கலந்த படமாக உருவாகியிருக்கும் ஓ மை கோஸ்ட் படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அருவா சண்ட
அருவா சண்ட படத்தை சிலந்தி பட இயக்குநர் ஆதிராஜன் இயக்கி உள்ளார். டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் அம்மாவாக சரண்யா பொண்வண்ணன் நடித்து உள்ளார்.
கடைசி காதல் கதை
டியர் டெத் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதி உள்ளார். பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
காலேஜ் ரோடு
நடிகர் லிங்கேஷ், காலேஜ் ரோடு படத்தை அறிமுக இயக்குநரான ஜெய் அமர்சிங் இயக்கி உள்ளார். படம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது
டாபிக்ஸ்