தமிழ் செய்திகள்  /  Entertainment  /  List Of Movies Releasing This Week In Theatres

Movies in Theaters: இந்த வாரம் தியேட்டரை அலங்கரிக்கும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jan 31, 2024 03:29 PM IST

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

தியேட்டர் (கோப்புபடம்)
தியேட்டர் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீஸாகிறது.

யோகேந்திரன் இயக்கத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் நடித்துள்ள திரைப்படம் 'மறக்குமா நெஞ்சம்'. இப்படத்தில் தீனா, பிராங்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சச்சின் வாரியர் இசையமைத்துள்ள இப்படமும் பிப்ரவரி 2 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'. சவரக்கத்தி திரைப்பட புகழ் இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்துக்கு இயக்குநர் மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார். இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.  சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் பிப்ரவரி 2 ஆம் ரிலீஸ் ரேஸில் ஐக்கியமாகி உள்ளது.

இயக்குனர் முத்து இயக்கத்தில் புதுமுகங்களான சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நயன் சுரேகா என பலர் நடித்துள்ள திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இந்தத் திரைப்படமும் பிப்ரவரி 2-ம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் தமிழ் சினி கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நந்தகோபால் வெளியிடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.