Leo Day 2 Box Office : லியோ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
லியோ திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு, விஜயுடன் ஜோடியாக சேர்ந்து இருக்கிறார் நடிகை த்ரிஷா. இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.
இந்தப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர், புரமோ வீடியோ, பாடல்கள் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.அதே நேரம் ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சைக்குள்ளானது.
அதன்படி நேற்று முன்தினம் வெளியான இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லியோ பொறுத்தவரை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சேர்த்து முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் இருந்து எந்த ஒரு திரைப்படமும் முதல் நாள் ரூ. 120 கோடி வரை வசூல் செய்தது கிடையாது. லியோ திரைப்படம் தான் அந்த வசூல் சாதனையை முதல் முறையாக செய்துகாட்டியுள்ளது.
முதல் நாளே 148.5 கோடி உலகளவில் வசூல் கிடைத்துள்ள நிலையில், இந்த வாரம் இறுதிக்குள் லியோ படத்தின் வசூல் மாபெரும் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளில் தமிழ்நாட்டில் 30 முதல் 35 கோடி ரூபாய் வரை லியோ வசூல் செய்துள்ளது. கேரளாவில் முதல் நாள் வசூல் 11 கோடி எனவும், கர்நாடகாவில் 14 கோடி என்றும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 15 கோடி ரூபாய் எனவும், மற்ற மாநிலங்களில் 5 முதல் 8 கோடி வரையும் வசூல் செய்துள்ளது.
இதனடிப்படையில் இந்தியாவில் மட்டும் லியோ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 63 முதல் 66 கோடி ரூபாய் வரை என சொல்லப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் மொத்தமாக சேர்த்து முதல் நாளில் 148 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளது லியோ.இது கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்ட் பிரேக் என சொல்லப்படுகிறது.
லியோ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
தமிழ்நாடு - ரூ.24 கோடி
ஆந்திரா மற்றும் தெலுங்கானா - ரூ.6 கோடி
கேரளா - 6 கோடி
கர்நாடகா - ரூ.4.50 கோடி
மற்றவை - ரூ 2 கோடி
லியோ தமிழகத்தில் ரூ.24 கோடி வசூலித்துள்ளது. ஆந்திர பிரதேசம், தெலுங்கானா சந்தையில் இப்படம் ரூ.6 கோடி வசூலித்ததுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.