தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lekha Washington: பாலிவுட் நடிகருடன் டேட்டிங்! ரெமாண்டிக் புகைப்படம் பகிர்ந்து ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்த லேகா வாஷிங்டன்

Lekha Washington: பாலிவுட் நடிகருடன் டேட்டிங்! ரெமாண்டிக் புகைப்படம் பகிர்ந்து ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்த லேகா வாஷிங்டன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 16, 2024 05:47 PM IST

பாலிவுட் நடிகருடன் டேட்டிங் உறவில் இருப்பதை அழகான ரெமாண்டிக் புகைப்படம் பகிர்ந்து தனது ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்துள்ளார் லேகா வாஷிங்டன். இருவரும் ரூ. 9 லட்சம் வாடகை கொடுத்து ஒரே வீட்டில் வசித்து வருகிறார்களாம்

ரெமாண்டிக் புகைப்படம் பகிர்ந்து ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்த லேகா வாஷிங்டன்
ரெமாண்டிக் புகைப்படம் பகிர்ந்து ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்த லேகா வாஷிங்டன்

ட்ரெண்டிங் செய்திகள்

இம்ரான் கான் - லேகா வாஷிங்டன் டேட்டிங்

பாலிவுட் நடிகரான இம்ரான் கான் லக், டெல்லி பெல்லி உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் கட்டி பட்டி என்ற படம் 2015இல் வெளியானது.

இவரது கம்பேக்குக்காக ரசிகர்கள் கத்திருந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முக்கிய விஷயம் ஒன்றை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

சமீபத்தில் நடிகை லேகா வாஷிங்டனுடன் டேட்டிங்கில் இருப்பதாக தெரிவித்தார் இம்ரான் கான். இதைத்தொடர்ந்து அதை உறுதிபடுத்தியுள்ளார் நடிகை லேகா. அவர் தனது இன்ஸ்டாவில் நடிகர் இம்ரானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரிலேஷன்ஷிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

லோகா வாஷிங்டன் இன்ஸ்டா பதிவு
லோகா வாஷிங்டன் இன்ஸ்டா பதிவு

ரெமாண்டிக் புகைப்படம்

இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்திருக்கும் லேகா வாஷிங்டன் கேப்ஷனாக எதையும் குறிப்படவில்லை. கடற்கரை மற்றும் நீள மேகங்களுக்கு பின்னணியில், silhouettes எபெக்டில் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்தவாறு ரெமாண்டிக்காக போஸ் கொடுத்துள்ளனர். இவர்களது டேட்டிங் குறித்து முதல் முறையாக பகிரப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ பகிர்வாக இது அமைந்துள்ளது.

லோகாவுடன் ரிலேஷன்ஷிப் குறித்து இம்ரான் கான்

சமீபத்தில் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில், "இந்த உறவு குறித்து வெளியே தெரியாமல் இருக்க கடுமையாக முயற்சித்தேன். நான் விவாகரத்து செய்து என் திருமணத்தை முடிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இப்படி யோசித்தேன்.

லேகா என் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கினார். அவர் அக்கறையாகவும், ஆதரவளிப்பராகவும் இருக்கிறார். என் தவறுகளை நேசிக்கிறார்.

மனச்சோர்வில் இருந்த என்னை மீட்டு கட்டியெழுப்பியதில் உதவிகரமாக இருந்தார். அவள் இல்லாமல் என்னால் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியுமா என்று எனக்கு தெரியவில்லை." என்று தெரிவித்திருந்தார்.

இம்ரான் கான் - லேகா வாஷிங்டன் ஆகியோர் மும்பையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் வாடகை மட்டுமே ரூ. 9 லட்சம் என கூறப்படுகிறது.

இம்ரான் கான் முதல் மனைவி

கடந்த 2011இல் அவன்திகா மாலிக் என்பவை திருமணம் செய்து கொண்டார் இம்ரான் மாலிக். இந்த தம்பதியினருக்கு இமரா என்ற பெண் உள்ளார். 2019இல் இந்த தம்பதிகள் விவாகரத்து பெற்றனர். இதன் பின்னர் 2020இல் லாக்டவுன் காலகட்டத்தில் லேகாவுடன் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளார் இம்ரான் கான். தற்போது இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள்.

தொகுப்பாளர் டூ நடிகையான லேகா வாஷிங்டன்

எஸ்எஸ் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்த லேகா வாஷிங்டன் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். தமிழில் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவரது தாயார் மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர் என்பதால் மும்பையில் வசித்து வந்த லேகா, பாலிவுட் நடிகர் இம்ரான் கானுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்