HBD Balu Mahendra: Dusky ஹீரோயின்களை கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற ரசிக்க வைத்த வித்தகர் பாலு மகேந்திரா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Balu Mahendra: Dusky ஹீரோயின்களை கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற ரசிக்க வைத்த வித்தகர் பாலு மகேந்திரா

HBD Balu Mahendra: Dusky ஹீரோயின்களை கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற ரசிக்க வைத்த வித்தகர் பாலு மகேந்திரா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 20, 2024 06:30 AM IST

HBD Balu Mahendra: சினிமாக்களில் ஹீரோயின் என்றால் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை உடைத்து தனது ஹீரோயின்கள் அழுக்கான அழகிகள் என வெளிக்காட் அவர்களை பார்த்து உருகும் விதமாக ரசிக்கவும் வைத்தவர் பாலு மகேந்திரா.

ஹீரோயின்களை கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற ரசிக்க வைத்த வித்தகர் பாலு மகேந்திரா
ஹீரோயின்களை கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற ரசிக்க வைத்த வித்தகர் பாலு மகேந்திரா

நாம பேசக்கூடாது, நம்ம வேலை பேசணும் என ஒருவர் செய்யும் பணியை மெச்சி கூறு வார்த்தை உண்மை கர்ப்பித்தவராக இருந்து வருகிறார். அவர் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் சினிமாவை பற்றி பேச்சு எழும்போதெல்லாம் தவறாமல் அவரது பெயர் ஏதோ ஒரு வகையில் இடம்பிடித்துவிடுகிறது. அப்படியான ஒரு தாக்கத்தை சினிமாவில் செய்து காட்டியவராக உள்ளார்.

சினிமா மீது மலர்ந்த காதல்

இலங்கையில் உள்ள இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த இவர் பள்ளி படிக்கும்போது, The brife of river kwai

என யுத்தம் படத்தின் ஷுட்டிங்கை பார்த்த தருணத்தில் இருந்தே சினிமா மீதான காதல் பாலுமகேந்திராவுக்கு மலர தொடங்கியது.

அதன் பிறகு தமிழகம் வரும், புனே பிலிம் இன்ஸ்ட்யூட்டில் போட்டோகிராபி பற்றி படிப்பு பின்னர் ஒளிப்பதிவாளர், அடுத்து இயக்குநர் என சினிமாவில் நீண்ட பயணத்தை மேற்கொண்டார்.

மலையாளத்தில் அறிமுகம்

மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான பாலுமகேந்திரா, சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றினார். அதன் பின்னர் கன்னட படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார்.

இயற்கையான ஒளிகளில், கதாபாத்திரங்களுக்கு அதிக மேக்கப் இல்லாமல் அவர்களின் இயற்கையான அழகை, வியப்புடன் ரசிக்கும் விதமாக தனது கேமரா கண்களால் படப்பிடித்து காட்டிய வல்லவராக திகழ்ந்தார்.

ஒளிப்பதிவு, இயக்கம் மட்டுமில்லாமல் எடிட்டிங்கிலும் தனது வித்தையை காட்டியவராக இருந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் எதார்த்தமாக கதை செல்லும் பாணியை கொண்டு வந்தவர்களில் முக்கியமானவராக பாலுமகேந்திரா இருந்துள்ளார். பொதுவாக சினிமா பாடல்களில் இருந்து வரும் டான்ஸ், விதவிதமான லொக்கேஷன் என்று காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த பார்முலாவை உடைத்து எதார்த்தமாக மாண்டேஜ் ஷாட்களால் பாடல்களை, கதாபாத்திரத்திரங்களின் எண்ண ஓட்டங்களையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களுக்கு வித்தியாச விருந்தை படைத்ததில் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்.

விருதுகளின் மன்னன்

தனது ஒவ்வொரு படங்களையும் ஆளமான படைப்பாக சொதுக்கி பாராட்டை பெற்றவராக இருந்த பாலு மகேந்திரா விருதுகளையும் வெல்ல தவறவில்லை. ஆறு முறை தேசிய விருது, அதில் இரண்டு முறை சிறந்த ஒளிப்பதிவுக்காக, பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநில அரசின் விருதுகளையும் வென்றுள்ளார்.

கல்ட் கிளாசிக் படங்கள்

இவரது படங்களில் பெரும்பாலானவை கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்ற படங்களாகவே இருந்து வருகின்றன. இவர் இயக்கிய மூன்றாம் பிறை, வீடு உள்பட சில படங்கள் சினிமாக்களின் பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் பாலா, வெற்றிமாறன் ஆகியோர் பாலுமகேந்திராவின் சிஷ்யர்கள் ஆவார்கள்.

ஆங்கிலத்தில் டஸ்கி என்ற கூறப்படும் அழுக்கு நிறைந்த, ஒளியில்லாத விஷயத்தையும் தனது கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற காட்டி ரசிக்க வைத்துள்ளார். இவரது படங்களின் ஹீரோயினக்ள் டஸ்கி அழகிகளாக இருப்பார்கள். ஹீரோயின் என்றால் வெள்ளை தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதை உடைத்து தனது ஹீரோயின்கள் அழுக்கான அழகிகள் என்பதை வெளிக்காட்டிய பாலு மகேந்திராவின் 85வது பிறந்தநாள் இன்று.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.