ரஜினிகாந்த் Vs தனுஷ் - போட்டியில் வெற்றி பெறுவது யார்?
பொங்கல் ரேஸில் கோலிவுட்டை சேர்ந்த இரண்டு நடிகர்களின் படங்கள் மோத உள்ளன.
தீபாவளி பண்டிகை முடிந்தது அடுத்து பொங்கல் ரேஸ் தான். தீபாவளிக்கு எப்படியாவது தன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பளர்கள் சிலர் ஆர்வம் காட்டி போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.
பொங்கல் பண்டிகை வர இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. ஆனால் இப்போதே பந்தயம் தொடங்கிவிட்டது. எல்லா நட்சத்திர ஹீரோக்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கோலிவுட்டில் எந்த ஹீரோவும் பின்வாங்குவதில்லை . விடுமுறையை குறி வைத்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்ய தயாராகி வருகின்றனர் .
இந்நிலையில், கோலிவுட்டை சேர்ந்த இரண்டு நடிகர்களின் படங்கள் மோத உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லால் சலாம்' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
இதில், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தாலும் , ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரஜினியின் கெட்அப் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. படத்தின் ப்ரோமோஷன் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் லால் சலாம் எந்த மாதிரியான சாதனைகளை படைக்கும் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன.
அதே நேரத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியாகிறது. தனுஷின் நடிப்பில் வெளியாகும் பான் இந்தியா படம் இது . இது அவரது கேரியரில் முதல் பெரிய பட்ஜெட் படமாகும். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே வெளியாகியுள்ள விளம்பரப் படங்களால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்