Label Series : நடிகர் ஜெயின் லேபிள் சீரிஸில் என்ன கதை?
Label Series : நடிகர் ஜெயின் லேபிள் சீரிஸில் என்ன கதை?
கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் ஜெய், இவர் லேபிள் என்ற சீரிஸில் தற்போது நடித்துள்ளார். அது இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வந்துள்ளது. இந்த சீரிஸ் இந்திய சட்டத்தின் ஆர்டிகள் 20 குறித்து பேசுகிறது. இதை அருண் ராஜா காமராஜ் எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்த வெப் சீரிஸில் கதாநாயகன், வழக்கறிஞராக தான் படும் பாடுகள் குறித்து பேசுகிறது. அவரது அடையாளம், குறிக்கோள், இந்த சமூகம் அவருக்கு கொடுத்த பெயரை கடந்து எப்படி வருகிறார் என்பதுதான் கதை.
இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான சிறிது நேரத்திலே லேபிளின் 1 முதல் 10 வரை எபிசோட்கள் ஆன்லைனில் வெளியாகத்துவங்கிவிட்டது. பல வெப்சைட்கள் அந்த சீரிஸின் முழு கன்டன்ட்களையும் காப்பி செய்துவிட்டன. அதை ஆன்லைனில் பகிர்ந்துவிட்டன.
லேபிளின் 1 முதல் 10 எபிசோடுகளும் இலவசமாக டவுண்லோடு செய்துகொள்ளும் அளவுக்கு ஆன்லைனில் உள்ளது. ஒரு லிங்கை பயன்படுத்தியே அனைத்து எபிசோட்களையும் பார்வையிடவும் முடியும். இந்த லிங்கை பயன்படுத்தியே அந்த சீரிஸை டவுண்லோடு செய்துகொள்ள முடியும். திரைப்பட தயாரிப்பாளர்களும், காவல்துறையும் சேர்ந்து எடுத்த திருட்டு தடுப்பு நடவடிக்கைகளும் வீணாகின.
இதில் ஜெய் கதாநாயகன், அவரது கதாபாத்திரத்தின் பெயர் பிரபாகரன். தான்யர் மஹதி என்ற கதாபாத்திரத்திலும், வீரசேகர் என்ற பெயரில் மகேந்திரன், குமரகுருவாக ஹரிஷங்கர் நாராயணன், ரங்காவாக ஸ்ரீமன், முருகேசனாக சரண்ராஜ், ராமா, இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி, அரிஷ் குமார், ரமேஷ் திலக், கும்கி அஸ்வின், ஜெஸ்பர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த சீரிஸை அருண்ராஜ் காமராஜ் எழுதி இயக்கியுள்ளார். ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை சாம் சி.எஸ் செய்துள்ளார். இதுவரை 10 எபிசோட்கள் முதல் சீசனில் வந்துள்ளது.
ஏ.ஜெ.பிரபாகரன் இந்த தொடரை முத்தமிழ் படைப்பகம் மற்றும் ARK என்டர்டெயின்மென்ட் ஆகிய பேனர்களின் கீழ் தயாரித்துள்ளார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராக பணியாற்ற, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பைரசி என்பது 1957ம் ஆண்டு காப்பி ரைட்ஸ் சட்டத்தின் மூலம் குற்றமாக பார்க்கப்படுகிறது. எனவே யாரும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஹெச்டி தமிழ் அறிவுறுத்துகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்