Kushboo Sundar: ரொமான்ஸே வராத ஆள்.. ட்ராவலே பிடிக்காது.. ஆனாலும் காதல்.. - குஷ்பு காதல் கதை!
என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளிடமும், நண்பர்களிடமும் நான் கீழ்படிந்து தான் செல்ல வேண்டும். நான் கொஞ்சம் மேலே பறக்க முயன்றாலும் அவர்கள் கொட்டி விடுவார்கள். அது எனக்கு பணிவுடன் இருக்க கற்றுத் தருகிறது.
பிரபல நடிகையான குஷ்பு தன்னுடைய கணவர் குறித்தும், தங்களுக்குள் இருந்த காதல் குறித்தும் அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நான் இங்கு ஒன்றை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். எனக்கு அருமையான கணவரும் அழகான மகள்களும் கிடைத்திருக்கிறார்கள்.
என்னுடைய அப்பா எனக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததை, நான் சுந்தர் சி யிடம் காதலிக்க தொடங்கிய போதே சொல்லிவிட்டேன். இன்றும் வீட்டில் அவரும், என்னுடைய மகள்களும் என்னை கலாய்த்து தள்ளுவார்கள். அப்போது நான் போன் செய்தால் சுந்தர் சி.. இப்போதுதான் உன்னை பற்றி பேசிக் கொண்டிருந்தோம் என்று சொல்வார். மேலும் வெளியில் தான் நீ புலி; வீட்டில் நீ வெறும் எலி என்று கிண்டல் அடிப்பார்.
என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளிடமும், நண்பர்களிடமும் நான் கீழ்படிந்து தான் செல்ல வேண்டும். நான் கொஞ்சம் மேலே பறக்க முயன்றாலும் அவர்கள் கொட்டி விடுவார்கள். அது எனக்கு பணிவுடன் இருக்க கற்றுத் தருகிறது.
சுந்தர் சி குணத்தில் எனக்கு அப்படியே எதிரானவர். அவர் பெரிதாக பேசவே மாட்டார். இருக்கக்கூடிய இடமே தெரியாது கோபம் வந்தால் மட்டும் தான் சத்தம் போடுவார். அந்த கோபமும் எப்போதாவதுதான் வரும். அவருக்கு ட்ராவல் சுத்தமாக பிடிக்காது.
வீடு உண்டு அலுவலகம் உண்டு என்ற ரீதியில் தான் அவரது வாழ்க்கை இருக்கும். ஆனால் நான் அப்படி இல்லை. இருப்பினும் நாங்கள் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். அவருக்கு ரொமன்ஸ் பெரிதாக வராது.
ஆனால் இன்று வரை எங்களுக்கு உண்டான அந்த ரொமான்ஸ் நிலைத்து நிற்கிறது. காரணம் நாங்கள் அதற்காக நிறைய உழைத்திருக்கிறோம். அப்போது அடிக்கடி கடிதம் எழுதுவது, அட்டைகள் வாங்கிக் கொடுப்பது, அவரிடம் பேசுவதற்காக போனுக்காக மணிக்கணக்காக காத்திருப்பது உள்ளிட்ட பலவற்றை செய்திருக்கிறோம்.
நான் அவருக்கு இரண்டு சூட்கேஸ் நிறைய காதல் அட்டைகளை அனுப்பி இருக்கிறேன். ஆனால் அவரோ 3 காதல் அட்டைகளை மட்டும்தான் அனுப்பி இருக்கிறார். இன்றைய காதலில் பெரிதாக உண்மை இருந்தது போல எனக்கு தெரியவில்லை. காரணம் என்னுடைய விஷயத்தில் இவர் காதலிக்கும் பொழுதே, ரொமான்ஸாக நடந்து கொண்டிருப்பது போல நடித்து இருந்தால் கல்யாணத்திற்கு பிறகும் எனக்கு அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால்,அவர் அவராகவே இருந்தார். அதனால் எனக்கு கல்யாணத்திற்கு பின்னர் ஏமாற்றம் ஏற்படவில்லை” என்று பேசினார்.
டாபிக்ஸ்