Kushboo Prabhu: பிரபு குஷ்பு காதல்? - ‘அது முடிஞ்சு போச்சு.. ஆனா வருத்தமில்ல’ - குஷ்பு ஓப்பன் டாக்!
பிரபு என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இணையாமல் போனதில் எனக்கு வருத்தமில்லை.
தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி. இவரின் மகன் நடிகர் பிரபு. ‘சங்கிலி’ திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து ‘கோழி கூவுது’ ‘நீதிபதி’ ‘சந்திப்பு’ ‘மிருதங்க சக்ரவர்த்தி’ ‘பாலைவன ரோஜாக்கள்' ‘சின்னத்தம்பி’ ‘அக்னி நட்சத்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
அந்தக்காலங்களில் இவரும் அப்போது பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்புவும் காதலித்து வந்தனர். ஆனால் அந்தக்காதல் எதிர்பாரத விதமாக கைகூடாமல் போனது. இது குறித்து பேட்டி ஒன்றில் நடிகை குஷ்புவிடம் கேட்ட போது, “ பிரபு என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இணையாமல் போனதில் எனக்கு வருத்தமில்லை. காரணம் வாழ்க்கை மிகவும் அழகானது” என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த காதல் பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.
சிவாஜி வீட்டில் ஒரு எம்ஜிஆர் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
அப்படியான குணம் கொண்டவர்தான் சிவாஜியின் மகன் இளைய திலகம் பிரபு. அவர் ஒரு வெள்ளந்தி மனசுக்காரர். பெரியவர், சிறியவர் என பேதமில்லாமல் அனைவருக்கும் மரியாதை கொடுப்பார். பிரபுவிற்கும் குறித்தும் அந்த காலத்தில் கிசுகிசுக்கள் வந்தன. ஒரு நடிகை உடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அந்த காதலுக்கு சிவாஜி தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த மறுப்பிற்கான காரணம் ஜாதி மதம் என்றும் தகவல்கள் பரவின. ஆனா அது குறித்து அதிகாரப்பூர்வமாக நமக்கு ஏதும் தெரியாது.
இந்த பிரச்சினைக்கு பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் குறைக்கப்பட்டன. அதன் பின்னர் இயக்குனர் ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு தற்போது நிம்மதியாக இருக்கிறார்.
டாபிக்ஸ்