தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kpy Bala Next Plan To Construct Free Hospital

KPY Bala Help : அனைவருக்கும் இலவச சிகிச்சை.. பாலாவின் அடுத்த டார்கெட் என்ன தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Mar 31, 2024 11:52 AM IST

மருத்துவமனை கட்டி அனைவருக்கும் இலவச சிகிச்சை கொடுப்பது தான் பாலாவின் அடுத்த டார்கெட் என பாலா கூறினார்.

பாலா
பாலா

ட்ரெண்டிங் செய்திகள்

கே. பி. ஒய் பாலா கனவு

சமூக நலப்பணிகளை தொடர்ந்து செய்து வரும் பாலா, மருத்துவமனை கட்டி இலவச சிகிச்சை அளிப்பது எனது நீண்ட நாள் கனவு என கூறி உள்ளார்.

கே. பி. ஒய் பாலா

விஜய் டிவிக்கு கிடைத்த முத்துகளில் பாலாவும் ஒருவர். அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா . அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இந்த நிகழ்ச்சி எங்கும் பிரபலம் ஆவதற்கு பாலாவும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது . அவரின் டைமிங் காமெடி தான் பாலாவின் ஸ்பெஷல். அதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

கோமளி பாலாவுடன் சமைக்கவும்

பின்னர் பட வாய்ப்புகள் வரத் தொடங்கிய காரணத்தினால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியவர். படங்களில் நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்வார்கள் . ஆனால் பாலா தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்தி வருகிறார்.

கிராமங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்குதல்

முதியோர் இல்லங்களுக்கு உதவுதல், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தல், ஏழைகளுக்கு நிதியுதவி வழங்குதல் என பல நல்ல விஷயங்களை பாலா தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பாலாவின் செய்கைகளை மேடையில் சுட்டிக்காட்டி அவரை ஊக்குவிக்கின்றனர் .

கே. பி. ஒய் பாலா இலவச மருத்துவமனை கட்ட திட்டமிட்டு உள்ளார்

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலாவிடம் அவரது நீண்ட நாள் ஆசை குறித்து கேட்கப்பட்டது. மருத்துவமனை கட்டி இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்று பதிலளித்து உள்ளார். அவர் ஆசிரியர் ஒரு பையன் தற்போது பொறியியல் படிக்கிறான். அடுத்த வருடம் படித்து முடித்ததும், மருத்துவமனைக்கான திட்டத்தைத் தானே போட்டுக் கட்டுவேன் என்று பாலா கூறினார். முக்கியமாக இருதய சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை உருவாக்க விரும்புவதாக பாலா பேட்டியில் கூறினார் . இவரின் இந்த பேட்டியை பார்த்த பலரும் அவரது ஆசை விரைவில் நிறைவேற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

சமீபத்தில் பைக் இல்லானக் தவித்த ஒருவருக்கு இலவசமாக பைக் வாங்கி கொடுத்தார். அத்துடன் அந்த இளைஞர்களுக்கு கல்விக்கு உதவியும் செய்து இருக்கிறார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்