Kota Srinivasa Rao: நான் இறந்துவிட்டேனா? - கோட்டா ஸ்ரீனிவாச ராவ் விளக்கம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kota Srinivasa Rao: நான் இறந்துவிட்டேனா? - கோட்டா ஸ்ரீனிவாச ராவ் விளக்கம்

Kota Srinivasa Rao: நான் இறந்துவிட்டேனா? - கோட்டா ஸ்ரீனிவாச ராவ் விளக்கம்

Aarthi V HT Tamil
Mar 21, 2023 06:53 PM IST

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தான் இறந்துவிட்டதாக வெளியான வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ்
கோட்டா ஸ்ரீனிவாச ராவ்

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்துவிட்டதாக இன்று காலை முதல் வதந்தி பரவி வந்தது. இதனால் அவரது ரசிகர்கள் பதறிப் போனார்கள்.

இதனையடுத்து இதற்கு விளக்கம் குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், “அனைவருக்கும் நமஸ்தே. முதலில், பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த உகாதி வாழ்த்துக்கள். நான் இந்த வீடியோ பேசுவதற்குக் காரணம், நான் நன்றாக இருக்கிறேன் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத் தான்.

நான் இறந்துவிட்டதாகச் சிலர் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பியதை அறிந்தேன். இந்தச் செய்தி எனக்கு முற்றிலும் தெரியாது. நாளை உகாதி கொண்டாட்டங்களுக்குத் தயாராகி கொண்டிருந்த போது, ​​காலை 7.30 மணியிலிருந்து எனக்கு அழைப்புகள் வரத் தொடங்கின.

இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், காவலர்கள் ஒரு வேனில் வருகிறார்கள். சுமார் பத்து பேர் இருந்தனர். நான் மூத்த நடிகர் என்பதால் மக்கள் வந்து அஞ்சலி செலுத்த பாதுகாப்பு வழங்க வந்துள்ளோம் என்றார்கள்.

இதுபோன்ற குழப்பமான வதந்திகளை அவர்கள் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதுபோன்ற வதந்திகளுக்கு மக்கள் விழ வேண்டாம் என்று இந்த வீடியோ மூலம் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் யாருடைய உயிரோடும் விளையாடக் கூடாது " என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.