Vaazhai: ‘ரொம்ப நன்றி மாரி..மீளவே முடியல.. திருமா வெளுத்த விருந்து..! - வாழை படத்தைக்கொண்டாடும் பிரபலங்கள்!
Vaazhai: வாழை படத்தை பார்த்த பிரபலங்கள் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதின் தொகுப்பை பார்க்கலாம்.
Vaazhai: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. அவரின் சிறுவயதில் சந்தித்த அனுபவங்களின் கதையை இந்தப்படத்தில் அவர் காட்சிகளாக வடிவமைத்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப்படம் தற்போது சமூகவலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படம் குறித்து பிரபலங்கள் கூறியிருக்கும் கருத்துக்களை தொகுப்பாக பார்க்கலாம்.
விஜய்சேதுபதி:
விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்:
கட்டியழுத தங்கதுரை
சூரி கொடுத்த முத்தம்:
பாலா கொடுத்த முத்தம்:
சிவகார்த்திகேயன்:
முன்னதாக, இயக்குநர் மாரில்செல்வராஜின் படங்களின் போஸ்டர்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை பெரும்பாலும் பிளாக் அண்ட் ஒயிட்டாகவே இருக்கும். அதற்கான காரணம் குறித்து மாரிசெல்வராஜ் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும்.
இது குறித்து அவர் பேசும் போது, “எனக்கு பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும். எனக்கு இன்னமும் பழைய நினைவுகள்தான் ஞாபகம் இருக்கிறது. புதியதாக நான் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. நான் புதிதாக வாழ்கிறேன் என்று கூறினால், இப்போது என்னுடைய பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கைதான் என்னுடைய புதிய வாழ்க்கை.
புதிதாக வாழும் இந்த வாழ்க்கையில் கூட, நான் அவர்களுடன் பழைய கதைகளைதான் பேசிக் கொண்டிருக்கிறேன். பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடித்ததற்கான காரணம் என்னவென்றால், அம்மா அப்பாவின் போட்டோ ஒன்று வீட்டில் இருந்தது. அது பிளாக் அண்ட் ஒயிட்டாக இருந்தது. அது ஒன்று தான் அவர்களிடம் இருந்த ஒரே போட்டோ.
நிறமும், முகமும் என்னுடன்
அந்த போட்டோவை சிறுவயதில் பார்த்து, பார்த்து அதில் இருக்கும் நிறமும், முகமும் என்னுடன் மிகவும் கனெக்ட் ஆகிவிட்டன. அதனால் நான் நிறங்கள் அடங்கிய விஷயங்களை பார்க்கும் போது எனக்கு அதில் பெரிதாக ஆர்வமே இல்லை.
நாம் நிறங்கள் கொண்ட உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் ஏதோ ஒன்று என்னுடைய கதையை ஞாபகப்படுத்துவதற்கு, எனக்கு உதவி செய்வதற்கு, அந்த பிளாக் அண்ட் ஒயிட் எனக்கு உதவுகிறது. என்னுடைய வீட்டில் என்னுடைய குழந்தைகளின் புகைப்படங்கள் பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கின்றன.
அந்த புகைப்படத்தை நான் பார்க்கும் பொழுது, அந்த புகைப்படத்தை எடுத்த நாளன்று அவள் என்ன செய்தாள் என்பது அப்படியே என் நினைவுக்கு வந்து விடும். ஆனால் அதை அப்படியே கலரில் போட்டால் அதன் பெரும்பான்மையான நினைவுகளை மறந்து விடுகிறேன். சினிமா இவ்வளவு பெரிய விஷயமாக முன்னேறி வளர்ந்த பின்னும், சில விஷயங்களை நாம் கடத்துவதற்கு பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தைதான் நாம் தேர்ந்தெடுக்கிறோம்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்