தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Arjun - Umapathy Ramaiah: கோலிவுட்டின் அடுத்த ஸ்டார் ஜோடி! உமாபதி, ஐஸ்வர்யா திருமண வரவேற்பு தேதி - முழு விவரம்

Aishwarya Arjun - Umapathy Ramaiah: கோலிவுட்டின் அடுத்த ஸ்டார் ஜோடி! உமாபதி, ஐஸ்வர்யா திருமண வரவேற்பு தேதி - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 05, 2024 10:30 PM IST

கோலிவுட்டின் அடுத்த ஸ்டார் ஜோடி ஆக மாற உள்ளார்கள் உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜுன். இவர்களின் திருமண வரவேற்பு குறித்த தேதி வெளியாகியுள்ளது.

உமாபதி, ஐஸ்வர்யா திருமண வரவேற்பு தேதி முழு விவரம்
உமாபதி, ஐஸ்வர்யா திருமண வரவேற்பு தேதி முழு விவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

உமாபதி - ஐஸ்வர்யா வரவேற்பு

இதைதத்தொடர்ந்து இந்த ஸ்டார் ஜோடியின் திருமண தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிரபல இணையத்தளமான பிங்க்வில்லா தகவலை பகிர்ந்துள்ளது. அதன்படி உமாபதி - ஐஸ்வர்யா ஆகியோரின் திருமண வரவேற்பு ஜூன் 14ஆம் தேதி சென்னையில் இருக்கும் லீலா பேலஸில் வைத்து மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

தங்களது மகளின் திருமணத்துக்கு வருகை தந்து ஆசிர்வதிக்குமாறு நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது மனைவி, முன்னாள் நடிகையாக நிவேதிதா அர்ஜுன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.  மேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்க உமாபதி - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியாலிட்டி ஷோவில் பூத்த காதல்

உமாபதி, ஐஸ்வர்யா ஆகியோர் முறையே ஹீரோ, ஹீரோயின்களாக தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி டிவி ஷோவில் போட்டியாளர்களாக உமாபதி ராமையா ஆகியோர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில்தான் ஐஸ்வர்யா அர்ஜுன், உமாபதி இடையே அறிமுகம் ஆகியுள்ளது. பின்னர் இவர்களுக்குள் நட்பாகி, காதல் பூத்த நிலையில் தற்போது திருமணம் செய்ய இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யாவின் தந்தையும், நடிகருமான அர்ஜுன் தான் தொகுப்பாளராக இருந்தார்.

ஐஸ்வர்யா அர்ஜுன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காத போதிலும், உமாபதியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் தற்போது கோலிவுட் சினிமாவின் அடுத்த ஸ்டார் ஜோடிகளாகியுள்ளனர்.

தமிழில் ஒளிபரப்பான அட்வெண்சர் ரியாலிட்டி டிவி ஷோவாக இருந்த சர்வைவர் நிகழ்ச்சியில், சென்னை 600028 படப்புகழ் நடிகை விஜயலட்சுமி பெரோஸ் வெற்றி பெற்றார்.

ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா அர்ஜுன்

தமிழில் 2013இல் வெளியான பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஐஸ்வர்யா அர்ஜுன். இதன் பின்னர் தந்தை அர்ஜுன் இயக்கத்தில் சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடத்திலும் பிரேம பாரா என்ற பெயரில் உருவானது. இந்த படங்களுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

உமாபதி ராமையா படங்கள்

இவர் 2017இல் வெளியான அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தம்பி ராமையா இயக்கத்தில் உருவான மணியார் குடும்பம், சேரன் இயக்கத்தில் திருமணம், 2021 தண்ணி வண்டி ஆகிய படங்களில் நடித்தார். இதன் பின்னர் இவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் நடிக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்