மீனாவை சந்தித்த பிரபல நடிகைகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மீனாவை சந்தித்த பிரபல நடிகைகள்

மீனாவை சந்தித்த பிரபல நடிகைகள்

Aarthi V HT Tamil
Aug 08, 2022 12:56 PM IST

மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த நிலையில் அவரை தென்னிந்திய நடிகைகள் சென்று சந்தித்து உள்ளனர்.

<p>மீனாவை சந்தித்த பிரபல நடிகைகள்</p>
<p>மீனாவை சந்தித்த பிரபல நடிகைகள்</p>

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அவர் அதிலிருந்து குணமடைந்தாக சொல்லப்படுகிறது.

இதனிடையே அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் அலர்ஜி இருந்த நிலையில் கொரோனாவுக்குப் பிறகு அது தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூன் 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவரது மரண செய்தி திரையுலகினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி பிரபலங்கள் நேரில் சென்று வித்யாசாகருக்கு அஞ்சலி செலுத்தினர்.

வித்யாசாகர் உயிரிழந்து ஒரு மாதமான நிலையில் அவர் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். 

இந்நிலையில் நைனிகா மற்றும் மீனாவை அவரது நெருங்கிய தோழிகளும், பிரபல நடிகைகளுமான ரம்பா, சங்கவி, சங்கீதா, ஆகியோர் நேரில் சென்று சந்தித்து உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.