Kishen Das: மீண்டும் ஒரு காதல் படத்தில் கிஷன் தாஸ்
தருணம் படத்தின் பூஜை இன்று சென்னையில் தொடங்கியது.
ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், தருணம்.
கிஷன் தாஸ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் இத்திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது.
அப்போது பேசிய அருண் பாலாஜி பேசியதாவது, ”அரவிந்த் ஶ்ரீநிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். இன்றைய இயக்குநர்களில் மிகத்திறமையான இளம் இயக்குநர். தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர். நல்ல படத்தை தருவார். இந்த திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
நடிகை ஸ்மிருதி வெங்கட் பேசியதாவது, ”எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு நன்றி. இந்த படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப்படம் பெரிய வெற்றிபெறும் என நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.
நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது, ”நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப்படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் நன்றி.
தயாரிப்பாளர் விஜய் பாண்டி பேசியதாவது, ”இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எப்போதும் செலவு வைக்க மாட்டார். தயாரிப்பாளருக்கான இயக்குநர். இந்தப்படத்தைக் கண்டிப்பாகச் சிக்கனமான பட்ஜெட்டில் நல்ல படைப்பாக எடுப்பார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் டில்லிபாபு பேசியதாவது, ”ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அரவிந்த் ஶ்ரீநிவாசன் முதல் படமே மிக நன்றாக இயக்கியிருந்தார். மிகப்பெரிய இடத்திற்கு செல்வார். நிறைய புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். நிறைய உதவி இயக்குநர்கள் கதைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தயாரிப்பாளர் புகழ் வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் கணேஷ் விநாயக் பேசியதாவது, ”தேஜாவு படத்திலேயே மிகத்திறமையான திரைக்கதையுடன் அசத்தியவர் அரவிந்த் ஶ்ரீநிவாசன். இந்த படத்திலும் கண்டிப்பாக அசத்துவார். தயாரிப்பாளர் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் கோபி பேசியதாவது, ”அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு பி ஆர் ஓ டீம் மூலம் தான் தெரியும். அந்தப்படம் பார்த்த பின் அவரை சந்தித்தேன். இந்தப்படத்தில் தயாரிப்பு செலவைக் குறைத்து நல்லதொரு வெற்றிப்படைப்பை தருவார்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி” என்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்