Kichcha Sudeep: அந்த மனசு இருக்கே.. குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய சுதீப்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kichcha Sudeep: அந்த மனசு இருக்கே.. குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய சுதீப்

Kichcha Sudeep: அந்த மனசு இருக்கே.. குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய சுதீப்

Aarthi V HT Tamil
Jul 06, 2023 07:35 AM IST

தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை நேரில் சந்தித்தார் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்.

சுதீப்
சுதீப்

இவர் கன்னட படங்களில் முதன்மை பிரபலமாக பணியாற்றி வருகிறார். இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். அது மட்டுமில்லாமல் 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் முதல் 100 பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் கன்னட நடிகர்களில் ஒருவராவார். நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஒரு கர்நாடக மாநில விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மூன்றாம் வகுப்பு படிக்கும், 9 வயது நிரம்பிய சாக்‌ஷி, மெட்டாஸ்டேடிக் அல்லாத ஆஸ்டியோசர்கோமா எனும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள ஸ்ரீ சங்கரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் நடிகர் சுதீப்பின் தீவிர ரசிகர். அவரிடம், ஏன் சுதீப்பை சந்திக்க ஆசை என்று கேட்ட போது.. "அவரை எனக்கு மிகவும் பிடிக்கும், என்றார்". கன்னடப் படமான 'ராணா' படத்தில் வரும் திதிலி பாடல் என்னை எப்போதும் உற்சாகப்படும். அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எனது கனவு என்றார். இவரது தாய் சுரேகா ராணி. தந்தை மஹிந்தர், தச்சராக பணியாற்றுகிறார்.

ஏழ்மையான இந்த சிறுமியின் ஆசையைப் பற்றி அறிந்த நடிகர் சுதீப், குழந்தையை நேரில் சந்தித்து உரையாடி, அவரது ஆசையை நிறைவேற்றி உள்ளார்.

தனது கனவு நாயகன் சுதீப் அவர்களை நேரில் சந்தித்ததில் குழந்தை சாக்‌ஷி உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.