HT Exclusive: ‘செல்ஃப் லவ்தான்.. அப்பா சொல்ற பல விஷயங்கள் என்ன அப்படியே.. லைஃப் மாறுன மொமண்ட்..’ - கீர்த்தி பாண்டியன்!
“ஏன் எனக்கு எல்லாமே கெடுதலாகவே நடக்கு, ஏன் எல்லாரும் என்ன விமர்சனம் பண்ணிட்டே இருக்காங்க.. அப்படியான விஷயங்கள் எல்லாமே வெளிப்புறத்துல நடக்கக்கூடிய விஷயங்கள்.” - கீர்த்தி பாண்டியன்!
பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். சினிமா எனும் கனவு தொழிற்சாலைக்குள், தனக்கும் ஒரு இடம் வேண்டும் என்று காலடி எடுத்து வைத்தவருக்கு, பயணம் முழுக்க முட்கள்.
முதலில் உடைந்து நொறுங்கியவர், பின்னர் உலகை புரிந்து கொண்டு, தன்னைத்தானே காதலித்து எழுந்ததோடு மட்டுமல்லாமல், தான் ஆசைப்பட்டதையும் அடைந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 10 வருடம் அசோக் செல்வனை காதலித்து வந்த அவர், அண்மையில் அவரை கரம்பிடித்தார். இவரது நடிப்பில், வருகிற டிசம்பர் 15ம் தேதி ‘கண்ணகி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
அந்த படம் தொடர்பாகவும், அவரது சொந்த வாழ்க்கை தொடர்பாகவும் பல்வேறு விஷயங்களை ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்திற்கு பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவரிடம் உங்கள் வாழ்க்கையில் மிக பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் என்ன என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு, அவர் பேசும் போது," எல்லாமே ஓவர் நைட்ல மாறிடுச்சுன்னு என்னால சொல்லிடமுடியாது. அதுக்கு உண்டான நேரத்தை அந்த பயணம் என்கிட்ட இருந்து எடுத்துக்குச்சு.
நிறைய பேருக்கு அவங்களோட வாழ்க்கையோட ஒரு கட்டத்துல ஒரு திருப்பம் ஏற்பட்டு, அவங்க பார்வை மாறி, வாழ்க்கையே தலைகீழா மாறும்.
அப்படிப்பட்ட சின்ன சின்ன பல திருப்பங்கள் என்னோட வாழ்க்கையில நடந்து இருக்கு. அந்தத் திருப்பங்கள் எல்லாமே, என்னோட பார்வையை மாத்தி இருக்கு
அப்பா என்கிட்ட நிறைய பேசுவார். அவர் பேசுற பல விஷயங்கள், எனக்கு தேவையான விஷயங்களை மறைமுகமாக சொல்லிரும்.
எனக்கு என்னோட வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது என்னுடைய செல்ஃப் லவ் தான் (தன்னைத்தானே காதலித்தல்)
ஏன் எனக்கு எல்லாமே கெடுதலாகவே நடக்குது, ஏன் எல்லாரும் என்ன விமர்சனம் பண்ணிட்டே இருக்காங்க.. போன்ற விஷயங்கள் எல்லாமே வெளிப்புறத்துல நடக்கக்கூடிய விஷயங்கள்.
ஆனா நல்லா பாத்தீங்க அப்படின்னா, அது எதுவுமே உங்க கண்ட்ரோல்ல கிடையாது. உங்க கண்ட்ரோல்ல இருக்கக்கூடிய ஒரே விஷயம், அந்த பிரச்சனைகளுக்கு நீ எப்படி ரியாக்ட் பண்றீங்க, அத உங்கள எவ்வளவு பாதிக்க விடுறீங்க அப்படிங்கறதுதான். இந்த விஷயத்தை நான் புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறமா, என்னுடைய வாழ்க்கை மாற ஆரம்பிச்சுச்சு
என்னுடைய மனச நல்லா வச்சிக்கிறதுக்கு எனக்கு நானே நிறைய பேசுவேன. அதாவது செலஃப் டாக். அது எப்படி இருக்கும்னா எப்படி இருக்கும்னா, நிறைய எழுதுவேன்.
அந்த உரையாடல் எனக்கும், அந்த பேப்பருக்கானதா இருக்கும். நம்மளால எல்லா விஷயங்களையும் வெளியே சொல்லிற முடியாது. ஆனா அதையெல்லாம் ஜர்னலா எழுதும் போது, ஒரு பாரத்தை இறக்கி வைச்சது மாதிரி ஃபீல் கிடைக்கும்.நீங்க உங்க பிரச்சினைகள அப்படி எழுதி பார்க்கும் போது, அதுல இருந்து உங்களுக்கு நிறைய பதில்கள் கிடைக்கும்.
ஒரு விஷயத்தை நம்ம ஒரு பார்வையில பார்ப்போம். ஆனா, அத நம்ம எழுதி பார்க்கும் போது, அந்த விஷயத்தை அப்படி பார்க்க வேணாம். வேற கோணத்தில பார்க்கலாம் அப்படின்னு தோணும். அப்படி பாக்கும்போது, உங்களுடைய வாழ்க்கை மாற ஆரம்பிக்கும்" என்று பேசினார்.
முழு பேட்டி விரைவில்!
டாபிக்ஸ்