Kayal Serial: ‘வினையான விதவை கோலம்..ராஜகாளியாக மாறிய ராஜி.. கண்ணீரில் காமாட்சி -கயல் சீரியலில் இன்று!-kayal serial today promo episode on september 11 2024 indicates rajeshwari chastises dharmalingam and vadivu - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: ‘வினையான விதவை கோலம்..ராஜகாளியாக மாறிய ராஜி.. கண்ணீரில் காமாட்சி -கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: ‘வினையான விதவை கோலம்..ராஜகாளியாக மாறிய ராஜி.. கண்ணீரில் காமாட்சி -கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 11, 2024 09:33 AM IST

Kayal Serial: சிவசங்கரி கயிலை சந்தித்து, எழிலை இந்த ஜென்மத்தில் உன்னை திருமணம் செய்ய நான் விடமாட்டேன் என்று சவால் விடுகிறாள். - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: ‘வினையான விதவை கோலம்..ராஜகாளியாக மாறிய ராஜி.. கண்ணீரில் காமாட்சி -கயல் சீரியலில் இன்று!
Kayal Serial: ‘வினையான விதவை கோலம்..ராஜகாளியாக மாறிய ராஜி.. கண்ணீரில் காமாட்சி -கயல் சீரியலில் இன்று!

இதற்கிடையே சிவசங்கரி கயிலை சந்தித்து, எழிலை இந்த ஜென்மத்தில் உன்னை திருமணம் செய்ய நான் விடமாட்டேன் என்று சவால் விடுகிறாள். இன்னொரு பக்கம், கயலின் தோழி நீ எழிலை திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக ஜோசியரிடம் பொய் சொல்லி கூட, நீ அவனை கல்யாணம் செய்தால் அவன் இறந்து விடுவான் என்று சங்கரி சொல்ல வைத்திருக்கலாம் அல்லவா?  என்று கேட்டாள். அத்துடன் இன்றைய புரோமோ முடிவடைகிறது.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

நேற்றைய எபிசோடில், தன்னை விதவை என்று காயப்படுத்தியதால் காமாட்சி பொன் உருக்கும் நிகழ்வை விட்டு வெளியே வந்தாள். அவரை கயல் குடும்பத்தினர் சமாதானம் செய்து வீட்டிற்குள் கூட்டி வந்தனர். இந்த நிலையில் இதை பார்த்து கடுப்பான எழில், இது போன்ற மூடநம்பிக்கைகளிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. காமாட்சியம்மா மாமா அவருடன் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, தங்கம் எடுத்துக்கொடுக்க வேண்டும் என்றான். இதைக்கேட்ட அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். இதனையடுத்து காமாட்சி தங்கத்தை எடுத்துக் கொடுத்தாள். 

இதனையடுத்து கயல் தோழி அவளுக்கு போன் செய்ய, கயல் வெளியே வந்தாள். அப்போது மாடி மேலே நின்று கொண்டிருந்த தீபிகா, இந்த இடத்திலேயே கயிலை தீர்த்து கட்டி விட வேண்டியது தான் என்று, தன்னுடைய காலுக்கு அடியில் இருந்த பூந்தொட்டியை தள்ளி விட்டாள். அந்த நேரத்தில் கயல் சற்று விலக அந்த இடத்தில் எழில் வந்து நின்று விட்டான். இதனையடுத்து, பூந்தொட்டி நொடிப் பொழுதில் எழிலின் அருகில் வந்து விழுந்தது. இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து நின்றனர். கயலோ அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட சங்கரியின் தங்கை, இதற்குத்தான் நான் முதலிலேயே இது போன்ற சுப காரியங்களில் விதவைப் பெண்கள் ஈடுபடக் கூடாது என்று கூறினேன் என்றார். இதைக்கேட்டு கடுப்பான எழில், எதையும் எதையும் முடிச்சு போடுகிறீர்கள் என்று காட்டமானான். 

காட்டமான எழில் 

மேலும் அவன், எல்லாவற்றையும் கொஞ்சம் பாசிட்டிவாக பார்க்கப் பழகுங்கள். அவர் தங்கம் எடுத்துக் கொடுத்ததால்தான் எனக்கு இதுபோன்று நடந்திருக்கிறது என்றால், அந்த பூந்தொட்டி என் மீது விழாமல் என் அருகில் தானே விழுந்தது. அதுவும் அதனால்தானே நடந்திருக்கிறது. 

அதை நீங்கள் அப்படி பாசிட்டிவாக பார்க்கலாமே என்று சொல்லி, அவர்களின் வாயை அடைத்தான். இதையடுத்து தீபிகா தான் இந்த வேலையை செய்திருக்கிறாள் என்று கண்டுபிடித்த சங்கரி, அவளை தனியாக அழைத்து என்னுடைய மகனையே கொல்ல பார்க்கிறாயா என்று கேட்டாள். அதற்கு தீபிகா, எழில் என்னுடைய உயிர். அவரை எப்படி நான் கொல்வேன் என்று சொல்ல, நீ உனக்கு தேவை என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்வாய் என்று சங்கரி வாக்குவாதம் செய்தாள். இதனையடுத்து தீபிகா, கயலை குறி வைத்தது, தவறுதலாக எழில் அருகில் விழுந்துவிட்டது என்றாள். இதையடுத்து சங்கரி பின்னாளில் இதுபோன்று முட்டாள்தனமாக எதையும் செய்து கொண்டிருக்கிறாதே என்று எச்சரித்து அனுப்பி வைத்தாள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.