Kayal Serial: விதவை விளையாட்டு.. கல்யாணத்திற்கு வேட்டு வைத்த வடிவு.. காட்டமான கயல் - கயல் சீரியலில் இன்று!-kayal serial today promo episode on september 10 2024 indicates vadivu new strategy to end the kayal marrige - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: விதவை விளையாட்டு.. கல்யாணத்திற்கு வேட்டு வைத்த வடிவு.. காட்டமான கயல் - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: விதவை விளையாட்டு.. கல்யாணத்திற்கு வேட்டு வைத்த வடிவு.. காட்டமான கயல் - கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 10, 2024 08:54 AM IST

Kayal Serial: “இதை ராஜேஸ்வரி கேட்டு அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு பக்கம் காற்றில் பூந்தொட்டி கீழே விழ, காற்றில் எப்படி பூந்தொட்டி விழும் என்று மொத்த குடும்பமும் சந்தேகப்பட்டு நின்று கொண்டிருக்கிறது.” - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: விதவை விளையாட்டு.. கல்யாணத்திற்கு வேட்டு வைத்த வடிவு.. காட்டமான கயல் - கயல் சீரியலில் இன்று!
Kayal Serial: விதவை விளையாட்டு.. கல்யாணத்திற்கு வேட்டு வைத்த வடிவு.. காட்டமான கயல் - கயல் சீரியலில் இன்று!

கயல் சீரியலில் நேற்று நடந்தது என்ன?

கயல் சீரியலில் இருந்து நேற்று வெளியான எபிசோடில் கயலுக்கு பொன்னுருக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த வடிவு, இந்த நிகழ்வை நிறுத்த வேண்டும் என்பதற்காக, காமாட்சியை அழைத்து நீ ஒரு கணவனை இழந்த விதவை; அப்படி இருக்கும் பொழுது நீ இதுபோன்ற சுப காரியங்களில் முன்னால் நிற்கக் கூடாது என்று சொல்லி,அவளை தள்ளி நிற்கும்படி கூறினாள்.

இதையடுத்து காமாட்சியும் சிறிது தூரம் தள்ளி நிற்க, இது பத்தாது இன்னும் தள்ளி நின்று, அங்கிருந்து நிகழ்வை பாரென்று வடிவு கறாராகச் சொல்லிவிட்டார். காமாட்சியும் அவர் சொன்னபடியே நிகழ்வு நடக்கும் இடத்தை விட்டு மிக தூரமாக சென்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் தன்னுடைய அம்மாவை காணவில்லையே என்று தேடிய கயலுக்கு, வடிவு செய்த காரியம் தெரியவந்தது. இதையடுத்து கோபம் அடைந்த அவள், வடிவையும் சங்கரியின் தங்கையையும் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்.

வெறும் கனவு

தொடர்ந்து உள்ளே வந்த சங்கரி, இப்படிப்பட்ட அகங்காரம் மிக்க பெண் எங்கள் வீட்டுக்கு வேண்டாம் என்று கல்யாணத்தை நிறுத்தினாள். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய, சடாரென்று கனவில் இருந்து நினைவுக்கு வந்தால் வடிவு. அதன் பின்னர்தான் அது வடிவுக்கு வந்த கனவு என்பது தெரிந்தது. நிஜத்தில் கயலுக்கு வடிவு செய்த விஷயம் தெரிய வர, கயல் அவரது அம்மாவை கையைப் பிடித்து இழுத்து முன்னே நிற்குமாறு கூட்டி வந்தாள். மேலும் தங்கத்தையும் மாமனார், மாமியாருடன் சேர்ந்து நீயும் கொடுக்கும்படி கூறினாள்.

ஆனால் இதற்கு இடையே வந்த சங்கரியின் தங்கை, இது போன்ற சுப காரியங்களில் விதவை பெண்கள் ஈடுபடக்கூடாது. அது மாப்பிள்ளைக்கு ஆபத்தாக வந்து விடும் என்று கூற, கயலோ இது போன்ற மூடநம்பிக்கைகளில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை, அம்மாவே எடுத்து கொடுக்கட்டும் என்று சொல்ல, சங்கரியின் தங்கை கடைசி வரை விடவில்லை. ஒரே போராட்டமாகவே சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் காமாட்சி கதற ஆரம்பித்து விட்டாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.