Kayal: எழில் எடுத்த அதிரடி முடிவு.. மனசு மாறிய கயல் - தொடங்க போகிறது கல்யாண கலாட்டா-kayal serial episode promo today on august 3 2024 indicates marriage plans starts - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal: எழில் எடுத்த அதிரடி முடிவு.. மனசு மாறிய கயல் - தொடங்க போகிறது கல்யாண கலாட்டா

Kayal: எழில் எடுத்த அதிரடி முடிவு.. மனசு மாறிய கயல் - தொடங்க போகிறது கல்யாண கலாட்டா

Aarthi Balaji HT Tamil
Aug 03, 2024 06:43 AM IST

Kayal: எழில், “ நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடு.. என்ன நடந்தாலும் இனி என்னை விட்டு செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு” என்றார்.

எழில் எடுத்த அதிரடி முடிவு.. மனசு மாறிய கயல் - தொடங்க போகிறது கல்யாண கலாட்டா
எழில் எடுத்த அதிரடி முடிவு.. மனசு மாறிய கயல் - தொடங்க போகிறது கல்யாண கலாட்டா

இன்றைய ப்ரோமோ

அதில், “ நான் எழிலிடம் பிரிந்துவிடலாம் என சொன்னவுடன், அவன் தன் உயிரை கொடுப்பதற்கு துணிந்துவிட்டான். நாங்கள் ஒன்று சேர்ந்தால் அவன் உயிருக்கு ஆபத்து என்று நினைத்தேன்.

யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்

ஆனால் அவன் உயிரே நான் தான் என்பதை புரிந்து கொண்டேன். என்னுடைய எழில் எனக்கு தான். நான் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன். நானும் எழிலும் ஒன்று சேர வேண்டும் என்பது தான் விதி “ என்றார் கயல்.

சத்தியம் செய்த கயல்

உடனே எழில், “ நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடு.. என்ன நடந்தாலும் இனி என்னை விட்டு செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு” என்றார். உடனே எதுவுமே யோசிக்காமல் கயல், எழிலுக்கு சத்தியம் செய்து கொடுத்தார்.

திருமண வேலைகள்

மேலும், “ இனிமேல் விலகி போகிறேன் என்றாலும் அது என் மரணமாக தான் இருக்கும். இனிமேல் எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். எங்களின் திருமண வேலைகள் கலை கட்ட போகுது.. வாங்க பார்க்கலாம் “ என சொல்வதுடன் ப்ரோமோ முடிந்தது. 

நேற்றைய எபிசோட்

" கயல் இனிமேல் உன் வாழ்க்கையில் நான் இல்லை “ என சொல்ல கடுப்பான எழில், “ என்ன நடந்தாலும் நான் உன் வாழ்க்கையை விட்டு போக மாட்டேன் “ என்றார்.

உன்னால் வாழ முடியும்

இறுதியாக தன் முடிவில் உறுதியாக இருக்கும் கயல், “ நான் இல்லை என்றாலும் உன்னால் வாழ முடியும் “ என அழுத்தமாக சொல்கிறார். வார்த்தைக்கு கூட அதை ஏற்க முடியாத எழில் எப்படி இதை பார்த்து கொண்டு சும்மா இருப்பார்.

எழில் எடுத்த அதிரடி முடிவு

தன் காதலை எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்று, “ நீ இல்லாமல் வாழ முடியாது.. பார்க்கிறாயா.. “ என சொல்லி கொண்டு அவசரமாக அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்துவிட்டார். 

நீ என்னுடையது

இதை பார்த்து அங்கு பணி செய்யும் நபர்கள் உடனே எழிலை காப்பாற்றினார்கள். எழில் தன் மேல் வைத்து இருக்கும் காதலை புரிந்து கொண்டு, இனிமேல் யாருக்காவும் இப்படி சொல்ல மாட்டேன். நீ என்னுடையது என்று கயல் மனசு மாறியது.  

இதை பார்த்த ரசிகர் ஒருவர், “ கயலுக்கு எப்ப பாரு இதான் வேல அப்படி சொன்ன எந்த மனுஷனும் டார்ச்சர் தாங்க முடியாத மாடியிலிருந்து குதுச்சிடுவான் “ என கமெண்ட் செய்து உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.