Jailer: பிரித்து மேயும் ஜெயிலர் வசூல்; 100 இதயங்களுக்கு 1 கோடி.. கலாநிதி மாறன் கொடுத்தனுப்பிய காசோலை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer: பிரித்து மேயும் ஜெயிலர் வசூல்; 100 இதயங்களுக்கு 1 கோடி.. கலாநிதி மாறன் கொடுத்தனுப்பிய காசோலை!

Jailer: பிரித்து மேயும் ஜெயிலர் வசூல்; 100 இதயங்களுக்கு 1 கோடி.. கலாநிதி மாறன் கொடுத்தனுப்பிய காசோலை!

Kalyani Pandiyan S HT Tamil
Published Sep 05, 2023 07:08 PM IST

ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கிடைத்த வசூலில் 1 கோடி ரூபாய் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜெயிலர் சக்ஸஸ்
ஜெயிலர் சக்ஸஸ்

இந்தத்திரைப்படம் வசூலில் 500 கோடியை கடந்து விட்டதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. கொட்டும் வசூலால் மனம் குளிர்ந்து போன கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்திற்கு 1.20 கோடி பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரையும், படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு 1.40 கோடி மதிப்புள்ள ‘Porsche’ காரை பரிசாக வழங்கினார்.

கூடவே இருவருக்கும் லாபத்தில் இருந்து தான் விருப்பப்பட்ட தொகையை காசோலையாகவும் கொடுத்தார். இந்த நிலையில் தன்னுடைய இசை மூலம் படத்தின் வெற்றிக்கும் பெருந்துணையாக அனிருத்திற்கு எதுவும் வழங்கப்படாதது குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் கலாநிதிமாறன் அனிருத்திற்கும் காசோலை ஒன்றை வழங்கியது தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவருக்கு porsche காரையும் பரிசாக வழங்கினார். 

இந்த நிலையில் ஜெயிலர் லாபத்தில் சேவைக்கும் பணம் ஒதுக்கும் வகையில், அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் 100 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை கலாநிதிமாறனின் மனைவியான காவேரி கலாநிதி வழங்கினார்.