Kasturi: கசமுசா பேச்சு.. படுக்கைக்கு அடி போட்ட பிரபல இயக்குநர்.. மானபங்கப்படுத்திய கஸ்தூரி! - கஸ்தூரி விளாசல்!
Kasturi: ஆடிசன் நடக்கும் பொழுதே நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியவில்லையா? ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து கிட்டத்தட்ட முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர்தான், இந்த விஷயம் உங்களுக்கு தெரிகிறதா என்ன? - கஸ்தூரி விளாசல்!
பிரபல நடிகையான கஸ்தூரி தனக்கு படப்பிடிப்பில் நேர்ந்த கொடுமை குறித்து தனியார் யூடியூப் சேனலில் அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
படப்பிடிப்பில் நடந்த கொடுமை
இது குறித்து அவர் பேசும் போது, “ நான் நடித்த இரண்டாவது தமிழ் படத்தின் இயக்குநர் என்னிடம் தவறாக பேசி, படுக்கைக்கு அழைக்க முயன்றார். அது எனக்கு வருத்தத்தை தந்தது. அவர் அப்படி பேசும் பொழுதே, அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பது எனக்கு தெரிந்து விட்டது. அந்த இடத்திலேயே நான் அவரை திட்டித்தீர்த்து, அசிங்கமாக நடத்தி, மானத்தை வாங்கிவிட்டேன்.
இதையடுத்து என்னை அந்தப் படத்தில் இருந்து தூக்கும் முயற்சிகள் நடந்தன. அதற்கு அவர்கள் காரணம் தேடிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று சொல்லி, என்னை அந்தப் படத்தில் இருந்து தூக்கி விட்டார்கள். இந்த காரணத்தைச் சொன்னதும், நானும் என்னுடன் இருந்தவர்களும் சிரித்து விட்டோம்.
காரணம் என்னவென்றால், கதாபாத்திரத்திற்கான ஆடிஷன் நடக்கும் போதே, நாம் என்ன மாதிரியான தோற்றத்தில் இருக்கிறோம் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் பார்க்கப்பட்டு, அதன் பின்னர்தான் நம்மை கமிட் செய்வார்கள். அப்படி இருக்கும் பொழுது, இவர் என்னை வேண்டுமென்றே படத்தில் இருந்து தூக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, இப்படி ஒரு விஷயத்தை சொன்னபோது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு நடிக்க வரவில்லை. ஆட வரவில்லை என்று சொல்லியிருந்தால் கூட அதை நான் ஒத்துக் கொண்டிருப்பேன்.
ஆடிசன் நடக்கும் பொழுதே
ஆடிசன் நடக்கும் பொழுதே நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியவில்லையா? ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து கிட்டத்தட்ட முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர்தான், இந்த விஷயம் உங்களுக்கு தெரிகிறதா என்ன? உண்மையில் சொல்லப்போனால், நான் அவரிடம் அப்படி நடந்து கொண்ட பின்னர் அவரால் அதன் பின்னர் என்னுடைய முகத்தில் விழிக்க முடியவில்லை. அதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
என்னுடைய குடும்பத்தில் எல்லோருமே நல்ல வசதி படைத்தவர்கள். என்னுடைய அம்மா வழக்கறிஞர் வேறு. இப்படி ஒரு ஸ்ட்ராங்கான இடத்தில் இருந்து வந்த எனக்கே இது நடக்கும் போது, சினிமாதான் வாழ்க்கை,இதன் மூலம்தான் நாம் சாப்பிட வேண்டும் என்ற ரீதியில், திக்கற்று வரும் பெண்களை இவர்கள் கோழிக்குஞ்சு போல தானே அமுக்க பார்ப்பார்கள். அவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்