Aval Sumangalithan: மூளையில் கேன்சர், பார்வை இழந்தவராக தோன்றும் கார்த்திக்..! விசுவின் சிறந்த பேமிலி டிராமா படம்
மூளையில் கேன்சர், பார்வை இழந்தவராக கார்த்திக் தோன்ற விசுவின் சிறந்த பேமிலி டிராமா படமாக அவள் சுமங்கலிதான் படம் உள்ளது. கணவன் - மனைவி இடையிலான உறவின் மகத்துவத்தை சொல்லும் விதமாக இந்த படம் இருந்தது

மூளையில் கேன்சர், பார்வை இழந்தவராக தோன்றும் கார்த்திக், விசுவின் சிறந்த பேமிலி டிராமா படம்
மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு அதே பெயரில் திரைப்படமாக உருவாகி ரசிகர்களை கவர்ந்த படம் அவள் சுமங்கலிதான். மறைந்த இயக்குநர், நடிகர் விசு தான் மேடையில் அரங்கேற்றிய அவள் சுமங்கலிதான் என்ற நாடகத்தை அதே பெயரில் கார்த்திக், இளவரசி நடிப்பில் திரைப்படமாக உருவாக்கியிருந்தார்.
படத்தின் கார்த்திக்குக்கு இணையாக அவரது நண்பராக சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விசு, கே.ஆர். விஜயா, நிஷா நூர், மாஸ்டர் காஜா ஷெரீஃப், கிஷ்மு என விரல் விட்டு என்னும் அளவில் தான் படத்தில் நடித்திருப்பார்கள். படத்தின் திரைக்கதையும் இவர்களை சுற்றியே செல்லும் விதமாக அமைந்திருக்கும்.
கணவன் - மனைவி உறவின் மகத்துவத்தை சொன்ன கதை
ஏழையாக இருந்து வரும் விசு தனது மகள் இளவரசிக்கு வரன் பார்க்கிறார். கார்த்திக்கை மாப்பிள்ளையாக தேடி படித்து திருமணம் செய்து வைக்கிறார்.