Suchitra leaks: ‘அவ மேல இன்னும் அன்பு இருக்கு.. ஆனா..’ - சுஜி உடனான விவாகரத்து பற்றி கார்த்திக்!
நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியான சர்ச்சையில் பிரபலமான சுஜித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக்குமார், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு பற்றி பேசி இருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர், பிரபல பாடகியான சுஜித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் பிரபல நடிகைகள், நடிகர்கள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரது முன்னாள் கணவர்தான் கார்த்திக் குமார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக யெல்லோ பென்ச் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியில் சுஜித்ரா பற்றியும் அவருடன் ஏற்பட்ட மணமுறிவு பற்றியும் வெளிப்படையாக பேசி இருந்தார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ சுஜித்ராவின் மீது எப்போதுமே எனக்கு அன்பு உண்டு. அவர் மிகவும் அழகான மனிதர். அவர் மிகவும் கஷ்டப்பட்டு, தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். எனக்கு அவர் மீது அக்கறை இருக்கிறது. அவரது முயற்சிகளின் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது. எனக்கும் அவருக்கும் இடையே நடந்த மணமுறிவு நிச்சயமாக கஷ்டமாகத்தான் இருந்தது.
இருப்பினும் அவர் மீது உள்ள அன்பு, அக்கறையெல்லாம் இன்னும் போகவில்லை. நாங்கள் கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒன்றாக பழகி இருக்கிறோம். அதனால் அவரது குடும்பம் பற்றியெல்லாம் எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும். என்னை பொறுத்தவரை அவள் ஒரு வாரியர். காரணம் என்னவென்றால் நமக்கெல்லாம் ஐந்து என்ற எண்ணளவில் பிரச்சினை வந்தால், அவளுக்கு 500 என்ற அளவில் பிரச்சினை வந்திருக்கிறது.
நாங்கள் இருவரும் இப்போது பிடித்து கொள்கிற அளவுக்கு பேசிக் கொள்வதில்லை.ச்அவருக்கு அவருடைய பிரச்சினைகளில் நான் முடிந்த அளவு உறுதுணையாக நின்று இருக்கிறேன். ஆனால் இன்னும் கொஞ்சம் அதிக அளவு நின்று இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.
பிரிவு என்பது எல்லோரிடத்திலும் வரும். அது உங்களது நண்பர் வட்டத்திற்குள் கூட வரும். என்ன அது சட்டபூர்வமாக இருக்காது அவ்வளவுதான். சுஜி லீக்சை பொறுத்தவரை, அந்த பிரச்சினையில் எப்போதுமே உங்கள் வாழ்க்கையில் இக்கட்டான ஒரு சூழ்நிலை வந்து கொண்டே தான் இருக்கும். அதனுடன் ஒரு தைரியத்துடன் போராட வேண்டியது உங்களுடைய பொறுப்பு என்பதை தெரிந்து கொண்டேன்.
தைரியத்தில் எப்பொழுதுமே கஷ்டங்களும் இருக்கிறது. தைரியம் என்பது, உங்களுக்கு வலி இல்லாமல் காண்பிப்பது அல்ல. எனக்கு பயம் இருக்கிறது, வலி இருக்கிறது என்று சொல்லி, அதற்கும் ஒரு சின்ன இடம் கொடுத்து, அதை எதிர்கொள்வதுதான் தைரியம்." என்று பேசினார்.
டாபிக்ஸ்