"திட்டம் போட்டு பண்ணிட்டாங்க" நெருக்கமா நடிக்கலைன்னா இப்படி செய்வீங்களா? புலம்பும் நடிகை
கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ஆர்த்திகாவை சீரியலில் இருந்து வேண்டுமென்றே தூக்கி விட்டதாக அவர் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று கார்த்திகை தீபம். கார்த்திக் ராஜ், ஆர்த்திகா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல், மக்களின் மனங்களை கவர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.
புது களத்தில் கார்த்திகை தீபம்
இந்த நிலையில், தற்போது இந்த சீரியல் வரும் திங்கள் முதல் புத்தம் புதிய கிராமத்து கதைக்களத்தில், புது நட்சத்திரங்களுடன் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ரேஷ்மா பசுபுலேட்டி கார்த்திக்கின் அத்தையாக சாமுண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், கார்த்திக்கு ஜோடியாக ஜீ கேரளம் சேனல் மூலமாக பாப்புலரான வைஷ்ணவி நடிக்க உள்ளார். மேலும் பழம்பெரும் நடிகர்களாக விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.