Karthigai Deepam Songs: கார்த்திகை தின ஸ்பெஷல் பாடல்கள் என்னென்ன?
தமிழ் சினிமாவில் கார்த்திகை தீபம் தொடர்பாக வெளியான பாடல்களின் தொகுப்பு.
கார்த்திக் தீபத்திருநாளான இன்று அனைவரது வீட்டிலும் விளக்கு ஏற்று வழிபடுவார்கள். இந்நாளில் தமிழ் சினிமாவில் வெளியான தீபம் சார்ந்த பாடல்களை பார்ப்போம்.
சாமுண்டி
நடிகர் சரத்குமார் மற்றும் கனகா நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான படம் சாமுண்டி. இத்திரைப்படத்தில் தேனிசை தென்றல் தேவாவின் இசையில், ஏத்துங்கடி ஏத்துங்கடி நல்ல கார்த்திகை தீபம் பாடல் இடம் பெற்று இருக்கும். இதை கே.எஸ். சித்ரா பாடினார்.
வானத்தை போல
வானத்தை போல திரைப்படத்தில் வரும், எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை யாராலும் அவ்வளவு சிக்கிரம் மறக்க முடியாது. எஸ். ஏ. ராஜ்குமாரின் இசையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடலை பாடியிருந்தார்.
மனசெல்லாம்
ஸ்ரீகாந்த் மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் வெளியான மனசெல்லாம் திரைப்படத்தில் இடம் பெற்ற, கையில் தீபம் ஏந்தி வந்தோம் பாடல் 2கே கிட்ஸ் மத்தியில் விருப்பமான ஒன்று. இளையராஜாவின் இசையில், சாதனா சர்கம் பாடியிருந்தார்.
சூர்யவம்சம்
தீபம் என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது சூர்யவம்சம் திரைப்படத்தில் இடம் பெற்ற, நட்சத்திர ஜன்னலில் பாடல் தான். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் மனோ மற்றும் சுனந்தா இந்த பாடலை பாடியிருந்தனர்.
தேவதை
நாசர் எழுதி இயக்கிய படம் தேவதை. நாசருடன் வினீத் மற்றும் கீர்த்தி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் பாடலை எஸ். பி. பி. சரண், சந்தியா, கே. பி. மோகன் ஆகியோர் பாடியிருந்தார்.
டாபிக்ஸ்