KARTHIGAI DEEPAM: கடத்தப்படும் தீபா.. காதலை சொன்ன கார்த்திக் காப்பாற்ற போவது என்ன?-karthigai deepam serial today episode on august 23 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கடத்தப்படும் தீபா.. காதலை சொன்ன கார்த்திக் காப்பாற்ற போவது என்ன?

KARTHIGAI DEEPAM: கடத்தப்படும் தீபா.. காதலை சொன்ன கார்த்திக் காப்பாற்ற போவது என்ன?

Aarthi Balaji HT Tamil
Aug 23, 2024 03:08 PM IST

KARTHIGAI DEEPAM: தீபா கார்த்திக்கிடம் இன்னொரு முறை ஐ லவ் யூ என்று சொல்ல சொல்லி கேட்க கார்த்திக் அதெல்லாம் ஒருமுறை தான் சொல்ல முடியும் என்று சொல்கிறான்.

KARTHIGAI DEEPAM: கடத்தப்படும் தீபா.. காதலை சொன்ன கார்த்திக் காப்பாற்ற போவது என்ன?
KARTHIGAI DEEPAM: கடத்தப்படும் தீபா.. காதலை சொன்ன கார்த்திக் காப்பாற்ற போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ஐ லவ் யூ என்று சொல்ல தீபா ஆனந்த கண்ணீருடன் கட்டியணைத்து கொண்ட நிலையில் இன்று ( ஆகஸ்ட் 23 ) நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

சரி சொன்ன தீபா

அதாவது தீபா கார்த்திக்கிடம் இன்னொரு முறை ஐ லவ் யூ என்று சொல்ல சொல்லி கேட்க கார்த்திக் அதெல்லாம் ஒருமுறை தான் சொல்ல முடியும் என்று சொல்கிறான். மேலும் நமக்குள்ள இந்த வாங்க போங்க.. சார் எல்லாம் வேண்டாம். அதையெல்லாம் மாற்றனும் என்று சொல்ல தீபாவும் சரி என்று சொல்கிறாள்.

அடுத்து ஐஸ்வர்யாவுக்கு ஒரு போன் கால் வர அவளும் போனை எடுக்க ரியா நான் போலீசில் இருந்து தப்பி விட்டேன், நீ தான் எனக்கு உதவி செய்யணும் என்று சொல்ல ஐஸ்வர்யா நானே இந்த வீட்டுக்குள்ள இப்போ தான் நுழைந்து இருக்கேன் என்று மறுக்கிறாள்.

தீபாவை கடத்த திட்டம்

ரியா அவளை மிரட்ட ஐஸ்வர்யா வேறு வழியின்றி ஓகே சொல்ல ரம்யா, ரியா, ஐஸ்வர்யா என மூவரும் கூட்டு சேருகின்றனர், பிறகு தீபாவை கடத்த திட்டமிடுகின்றனர். ஐஸ்வர்யா தீபாவுக்கு தெரியாமல் மயக்க மருந்தை கொடுக்க தீபாவும் அதை குடித்து மயங்கி விழுகிறாள்.

அடுத்து நடக்க போவது என்ன

இதையடுத்து ரம்யா, ரியா, ஐஸ்வர்யா என மூவரும் சேர்ந்து தீபாவை மண்டபத்தில் இருந்து கடத்தி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட்

உங்களுக்கு தீபாவை பிடிக்காதா என்று கேட்க கார்த்திக் அப்படியெல்லாம் இல்ல, எனக்கும் தீபாவை பிடிக்கும் என்று சொல்கிறான். தொடர்ந்து, நானே அவளிடம் காதலை சொல்கிறேன் என்று சொல்ல, இதை அந்த பக்கமாக வந்த அம்பிகாவும் கேட்டு சந்தோசப்படுகிறாள்.

மறுபக்கம் ரியா, ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு காவலுக்கு இரண்டு போலீசும் இருக்க, அப்போது ஒருவன் டீ கொண்டு வந்து கொடுக்க, அதை குடித்ததும் இருவரும் மயங்கி விழுகின்றனர். அதன் பிறகு அந்த வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் ரம்யா, அங்கிருந்து ரியாவை காப்பாற்றி அழைத்துச் செல்கிறாள்.

இங்கே மண்டபத்தில் கார்த்திக், தீபாவிடம் தனது காதலை சொல்கிறான். இதைக்கேட்ட தீபா கார்த்திக்கை காதலுடன் கட்டியணைத்து கொள்கிறாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.