KARTHIGAI DEEPAM: தீபா வேடத்தில் மணமேடை ஏறிய ரியா.. கார்த்திக்கு வந்த வார்னிங் - கார்த்திகை தீபம் வீகென்ட் எபிசோட்
KARTHIGAI DEEPAM: தீபாவை ஒரு குடோனில் அடைத்து வைத்த பிறகு தீபா போலவே மாஸ்க் அணிந்து வரும் ரியா என்ன பார்க்கிற? உன்னை மாதிரியே மாஸ்க் அணிந்து நான் தான் மணமேடை ஏறி கார்த்திக் கையால் தாலி கட்டிக்க போறேன் என்று சொல்கிறாள்.

KARTHIGAI DEEPAM: கார்த்திகை தீபம் வீகென்ட் ( ஆகஸ்ட் 24 மற்றும் ஆகஸ்ட் 25 ) எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா, ரியா மற்றும் ஐஸ்வர்யா என மூன்று பேரும் சேர்ந்து தீபாவை கடத்திய நிலையில் இன்றும் நாளையும் ( ஆகஸ்ட் 24 மற்றும் ஆகஸ்ட் 25 ) நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தீபாவை ஒரு குடோனில் அடைத்து வைத்த பிறகு தீபா போலவே மாஸ்க் அணிந்து வரும் ரியா என்ன பார்க்கிற? உன்னை மாதிரியே மாஸ்க் அணிந்து நான் தான் மணமேடை ஏறி கார்த்திக் கையால் தாலி கட்டிக்க போறேன் என்று சொல்கிறாள்.
மாறுவேடத்தில் தீபா போல் வந்த ரியா
இதனை தொடர்ந்து மறுபக்கம் தீபாவை காணாமல் மண்டபத்தில் எல்லாரும் பதற்றத்தில் இருக்க ரியா மாறுவேடத்தில் தீபா போல் மண்டபத்திற்குள் நுழைகிறாள், மீனாட்சியும் மைதிலியும் எங்க போய்ட்ட என்று கேட்டு வியர்வையை துடைக்க போக ரியா தொட விடாமல் நானே துடைத்து கொள்கிறேன் என்று புடவையை எடுத்து துடைத்து சமாளிக்கிறாள்.