“டான்ஸ் ஆட தெரியல.. ஃபைட் தெரியலன்னு அண்ணன கிண்டல் பண்ணாங்க.. ‘கைதி 2’ -ல ரோலக்ஸ பார்த்தே ஆகணும்” - கார்த்தி!
அவருக்கு டான்ஸ் ஆட தெரியவில்லை, நல்ல உடல் வாகு இல்லை; ஒழுங்காக ஃபைட் செய்ய தெரியவில்லை என்று பலரும் கிண்டல் செய்தார்கள். - கார்த்தி
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு படைப்பை எதிர்பார்க்கவில்லை
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கார்த்தி, “கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பொதே அதைப்பார்த்து நான் ஆடிப் போய் உட்கார்ந்து இருந்தேன். காரணம் என்னவென்றால், சிறுத்தை சிவாவிடம் இருந்து நான் இப்படிப்பட்ட ஒரு படைப்பை எதிர்பார்க்கவில்லை. இரண்டு வருடங்களாக ஒரு படத்தில் வேலை பார்ப்பவர்கள், அந்த படத்தை பற்றி ஆசுவாசமாக பேசுவது என்பது அவ்வளவு ஈசி கிடையாது. அப்போதே இந்தப்படம் ஆசீர்வதிக்கப்பட்ட படமாக மாறிவிட்டது என்று எனக்குத் தோன்றியது.
ரசிகர்களுக்கு இது போதும் என்று ஒருபோதும் அவர் நினைக்கவே மாட்டார். உழைப்பை கொட்டிக் கொண்டே இருப்பார். அவரது முதல் படம் வந்தபோது, அவருக்கு டான்ஸ் ஆட தெரியவில்லை, நல்ல உடல் வாகு இல்லை; ஒழுங்காக ஃபைட் செய்ய தெரியவில்லை என்று பலரும் கிண்டல் செய்தார்கள். அந்த சமயத்தில், அவர் காலை 3 மணி நேரம் டான்ஸ் கிளாசிற்கும், மாலை 3 மணி நேரம் ஃபைட் கிளாசிற்கும் செல்வார். தொடர்ந்து அப்படியே அவர் உழைத்துக் கொண்டே இருந்தார்.
பிச்சு உதறினார்.
பின்னாளில் டான்சில் பிச்சு உதறினார். நான் ஆயுத எழுத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தேன். அதில், ஒரு காட்சியில் அங்கிருந்து வரும் வண்டியின் மீது ஏறி, சம்மர் சால்ட் அடித்து உருண்டு இறங்க வேண்டும். முதலில் அதற்கு டூப் வைத்துக் கொள்ளலாம் என்று ஃபைட் மாஸ்டர் கூறினார். ஆனால் அண்ணன், அதனை தானே செய்வதாக கூறினார். அதனை செய்து முடித்த பிறகு, ஃபைட் மாஸ்டர் என்னப்பா..? உன்னுடைய அண்ணன் ஃபைட்டர் போல செய்கிறார் என்று என்னிடம் சொன்னார்.
இன்று பிசிக் என்று எடுத்துக் கொண்டால், அவர் போட்டோ இல்லாத ஜிம்மே கிடையாது என்று சொல்லலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அண்ணா முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். எல்லா இளைஞர்களும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அண்ணாவும் ஒரு காரணம். ஒன்றுமே தெரியாது.. உனக்கு ஒன்றுமே வராது என்று சொன்னவர்கள் மத்தியில், உழைத்தால் நாம் எவ்வளவு பெரிய உயரத்தை வேண்டுமென்றாலும் அடையலாம் என்பதற்கு நம் அண்ணனை விட்டால் வேறு உதாரணம் கிடையாது.
‘கைதி 2’ -வை நிச்சயம் அடுத்த வருடம் செய்து விடலாம். கண்டிப்பாக ரோலக்சை நேருக்கு நேராக பார்க்க வேண்டும் பார்த்தே ஆக வேண்டும்.
சிறுத்தை சிவாவும் நானும் சிறுத்தை படத்தில் ஒன்றாக பணியாற்றினோம். ஒரு ஹீரோவை அவர் எப்படி நடத்துகிறாரோ அப்படித்தான் ஒரு ஜூனியர் நடிகரையும் நடத்துவார் அதனாலேயே நடிகர்கள் அனைவரும் அவரது படத்தில் தங்களது உச்சபட்ச அர்ப்பணிப்பை கொடுக்க முயற்சி செய்வார்கள். அனைத்தையும் முதல்நாளே திட்டமிட்டு விடுவார். படித்து முடித்துவிட்டு பரிட்சை எழுத தயாராக ஸ்கேலோடு வரும் ஒரு மாணவன் போல தான் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்