Pariyerum Perumal: ஹிந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்? - கரண் ஜோஹரை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம்
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற அழுத்தமான திரைப்படத்தை கொடுத்து கவனம் பெற்றவர் இயக்குநர் மாரிசெல்வராஜ். நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தில் ‘கயல்’ ஆனந்தி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருந்த நிலையில், சந்தோஷ் நாரயணன் இசையமைத்து இருந்தார்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரபல் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
கதிர் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் சித்தார்த் சதுர்வேதியும் கயல் ஆனந்தி நடித்த கதாபாத்திரத்தில் திருப்தி திம்ரியும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை கேள்விபட்ட நெட்டிசன்கள் கரண் ஜோஹரிடம் தயவு செய்து அந்த நல்ல படத்தை விட்டு விடுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பரியேறும் பெருமாள் படம் கொடுத்த தாக்கம், தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பை பெற்றார் மாரி. அந்த திரைப்படம்தான் ‘கர்ணன்’.பேருந்து தன் ஊரில் நிற்காததை தட்டிக்கேட்கும் கிராமம் எப்படி ஜாதிய வன்மத்தில் சிக்குகிறது, அதனால் அந்த கிராமம் எதிர்கொண்ட விளைவுகள் என்னென்ன என்பதை சுற்றி அந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது. அடிப்படையில் கவிதைகள் மீது பேரார்வம் கொண்ட மாரி, அந்த திரைப்படத்தையும் அதே அழகியலோடு எடுத்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இவர் தனுஷூடன் இணைய இருக்கிறார். இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் அடுத்ததாக வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்