Raadhika: ‘மார்க்கெட் போன கிழவியெல்லாம்… நீயெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் பத்தி பேசுற’ -ராதிகாவை வெளுத்த பிரபலம்!-kantharaj latest interview about radhika sarathkumar hidden cameras charge amid film industry scandal in kerala - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raadhika: ‘மார்க்கெட் போன கிழவியெல்லாம்… நீயெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் பத்தி பேசுற’ -ராதிகாவை வெளுத்த பிரபலம்!

Raadhika: ‘மார்க்கெட் போன கிழவியெல்லாம்… நீயெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் பத்தி பேசுற’ -ராதிகாவை வெளுத்த பிரபலம்!

HT Tamil Desk HT Tamil
Sep 03, 2024 01:38 PM IST

Raadhika: அவர்கள் எல்லோருமே மார்க்கெட் இழந்து வீட்டில் கிழடுகளாக உட்கார்ந்து இருப்பவர்கள்தான். இது ஒரு விளம்பரம் அவ்வளதான். ராதிகாவிற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் - ராதிகாவை வெளுத்த பிரபலம்!

Raadhika: ‘மார்க்கெட் போன கிழவியெல்லாம்… நீயெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் பத்தி பேசுற’ -ராதிகாவை வெளுத்த பிரபலம்!
Raadhika: ‘மார்க்கெட் போன கிழவியெல்லாம்… நீயெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் பத்தி பேசுற’ -ராதிகாவை வெளுத்த பிரபலம்!

இது குறித்து அடடா தமிழா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கும் அவர், “40 வருடங்களுக்கு முன்பாக கேரவனே கிடையாது. முதலில் அதுவே பொய். சிசிடிவி கண்டுபிடித்து 25 வருடங்கள் தான் ஆகிறது. ‘கிழக்கே போகும் ரயில்’ படம் சமயத்திலேயே இந்த வசதிகள் எல்லாம் வந்து விட்டனவா என்ன…? இந்த சீசனை பயன்படுத்திக்கொண்டு எனக்கும் டிமாண்ட் இருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ராதிகா பேசுகிறார்.

ராதிகா
ராதிகா

ஆழ்ந்த அனுதாபங்கள் ராதிகா

இவர் மட்டுமல்ல, இவரைத் தொடர்ந்து இன்னும் பலர், என்னையும் பாலியல் தொந்தரவு செய்தார்கள் என்று சொல்வதற்காக வருவார்கள். அவர்கள் எல்லோருமே மார்க்கெட் இழந்து வீட்டில் கிழடுகளாக உட்கார்ந்து இருப்பவர்கள்தான். இது ஒரு விளம்பரம் அவ்வளதான். ராதிகாவிற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் இதை வைத்து நீங்கள் மார்க்கெட் தேடாதீர்கள். அட்ஜஸ்ட்மென்ட் என்றால் என்ன ஒத்துழைப்பு. அது எப்படி குற்றமாகும். நான் ராதிகாவை மட்டும் சொல்லவில்லை. ஒட்டுமொத்த மலையாள உலகில் குற்றச்சாட்டு எழுப்பி இருப்பவர்கள் அனைவரையுமே நான் கூறுகிறேன்.

 

ராதிகா
ராதிகா

ரோட்டில் ஒரு பெண்ணை ஒருவர் கையைப் பிடித்து இழுத்தால் அந்தப் பெண் அவரை பளார் என்று அடிப்பார். அவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார். நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த விவகாரத்தில் சம்பவம் நடந்த போது யாரும் போலீசில் ஒரு புகார் கூட கொடுக்கவில்லை. யார் உங்களை அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைத்தாரோ, அவருடனே தொடர்ந்து நடித்திருக்கிறீர்கள், பெரிய ஸ்டாராக வந்திருக்கிறீர்கள்.

அட்ஜஸ்ட்மென்ட் பிடிக்கவில்லை என்றால்…

உங்களுக்கு அந்த அட்ஜஸ்ட்மென்ட் பிடிக்கவில்லை என்றால், இந்த திரைத்துறைக்கு ஏன் வருகிறீர்கள்? பிடிக்கவில்லை என்று சென்று விடலாமே..ஆரம்பத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்வீர்கள் அதற்கான பணம் வாங்கி கொள்வீர்கள்; படத்தில் வாய்ப்பு வாங்கிக் கொள்வீர்கள். பெரிய ஆளாக வந்தவுடன் தற்போது தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார் என்று குற்றம் சாட்டுவீர்கள். இது என்ன நியாயம்?

இவர் வைத்தது தான் சீரியலில் ஒரு காலத்தில் சட்டமாக இருந்தது அந்த அளவுக்கு பவர்ஃபுல்லா இருந்தார். அப்போதெல்லாம் அவர் இது குறித்து பேசவே இல்லை. இப்போது மார்க்கெட் இல்லை என்றவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இப்பவும் அவர் புகார் தான் கூறியிருக்கிறார். உனக்கும் ஆசை; கேரள நடிகைகள் எல்லாம் இது குறித்து பேசி இருக்கிறார்கள். நாம் பேசவில்லை என்றால், நம்மை கேவலமாக பேசிவிடுவார்கள் என்று நினைக்கிறாய்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.