Kantara Chapter 1: சிவனின் வியர்வையில் இருந்து..களமிறங்கும் கடம்ப வம்சம்;காந்தாரா சாப்டர் 1 ல் ஒளிந்திருக்கும் ரகசியம்!
காந்தாரா திரைப்படத்தின் கதை பற்றி சின்ன பொறி கிடைத்து இருக்கிறது.

காந்தாரா திரைப்படத்தின் கதை பற்றி சின்ன பொறி கிடைத்து இருக்கிறது.
இந்திய சினிமாவில் கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக கன்னட மொழியில் வெளியாகி, அதன் பின்னர் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, பெரிய அளவில் கவனம் பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’.
குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்தப்படத்தை நடித்து இயக்கி இருந்தார் ரிஷப் ஷெட்டி. இந்த நிலையில், இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும், இது கடந்த படத்தின் கதைக்கு முன்னதாக நடந்த விஷயங்கள் பற்றி இருக்கும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்றைய தினம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி காந்தாரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி இருக்கிறது.