Nimeshika: பாடாய் படுத்தும் பெண் இச்சை.. ‘கண் முன்னாலேயே அறையின் கதவை மூடி.. பப்லுக்கு பார்ட்னர் செட் ஆகல’ - நிமிஷிகா-kannana kanne serial nimeshika shocking interview about babloo sheetal break up and sexual harassment in serials - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nimeshika: பாடாய் படுத்தும் பெண் இச்சை.. ‘கண் முன்னாலேயே அறையின் கதவை மூடி.. பப்லுக்கு பார்ட்னர் செட் ஆகல’ - நிமிஷிகா

Nimeshika: பாடாய் படுத்தும் பெண் இச்சை.. ‘கண் முன்னாலேயே அறையின் கதவை மூடி.. பப்லுக்கு பார்ட்னர் செட் ஆகல’ - நிமிஷிகா

HT Tamil Desk HT Tamil
Sep 13, 2024 08:14 PM IST

Nimeshika: தொலைக்காட்சி தொடர்களிலும் இதுபோன்ற பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கின்றன. சீரியலில் பெண்களை நடிக்க தேர்வு செய்கிறவர்கள், நீ என்னுடன் படுக்கையை பகிர்ந்தால், உனக்கு அடுத்த சீரியலில் நான் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி அவர்களை அவர்களின் இச்சைக்கு பயன்படுத்துவார்கள். - நிமிஷிகா!

Nimeshika: பாடாய் படுத்தும் பெண் இச்சை.. ‘கண் முன்னாலேயே அறையின் கதவை மூடி.. பப்லுக்கு பார்ட்னர் செட் ஆகல’ - நிமிஷிகா
Nimeshika: பாடாய் படுத்தும் பெண் இச்சை.. ‘கண் முன்னாலேயே அறையின் கதவை மூடி.. பப்லுக்கு பார்ட்னர் செட் ஆகல’ - நிமிஷிகா
நிமிஷிகா
நிமிஷிகா

சீரியலிலும் பாலியல் தொல்லை

இது குறித்து அவர் பேசும் போது, “மீடியாவில் இருப்பதால் இது போன்ற பாலியல் ரீதியான தொந்தரவுகள் பெரிதளவு வெளியே தெரிகிறது. ஆனால், இது எல்லா இடங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமூகத்தில் நடக்கும் இந்த தவறுகளுக்கு பெண்கள் அணியும் உடைகள் காரணமாக முன்வைக்கப்படுகிறன. ஆனால் அது உண்மை அல்ல. அப்படி பார்த்தால், இங்கு சிறுமிகளும் கற்பழிக்கப்படுகிறார்கள்.

தொலைக்காட்சி தொடர்களிலும் இதுபோன்ற பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கின்றன. சீரியலில் பெண்களை நடிக்க தேர்வு செய்கிறவர்கள், நீ என்னுடன் படுக்கையை பகிர்ந்தால், உனக்கு அடுத்த சீரியலில் நான் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி அவர்களை அவர்களின் இச்சைக்கு பயன்படுத்துவார்கள். அதை நான் கண் முன்னே பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த விஷயமெல்லாம் அந்த சீரியலின் இயக்குநருக்கு தெரியவே தெரியாது. ஆனால், அவர்களின் உதவியாளர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் சத்தமில்லாமல் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

அறையின் கதவை மூடிய உதவியாளர்

ஒரு முறை ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த உதவியாளர் ஒருவர் அருகில் இருந்த அறைக்குள் சென்று கதவை லாக் செய்து கொண்டார். இது குறித்து இன்னொரு உதவியாளரிடம் கேட்ட போது.. அக்கா சும்மா.. என்று சொல்லி அவர் நழுவி கொண்டார். ஆனால், அந்த அறைக்குள் ஒரு பெண் இருப்பது எனக்கு தெரிந்து விட்டது. அந்தப் பெண் வெளியே வரும் பொழுது, என்னை பார்த்து சிரித்துக் கொண்டு சென்றாள். இது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. சில இடங்களில் பெண்கள் அதனை தவிர்க்கவும் செய்கிறார்கள்.” என்றார்.

 

பப்லு உடன் நிமிஷிகா
பப்லு உடன் நிமிஷிகா

கண்ணான கண்ணே சீரியலில் இவரின் அப்பாவாக நடித்த பப்லு பற்றி பேசும் போது, “ அவர் உண்மையில் நன்றாக பழகக்கூடியவர். அவருக்கு வாழ்க்கையில் சரியான பார்ட்னர் கிடைக்கவில்லை என்பதால் அவர் இப்படி மாறிக்கொண்டே இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அது குறித்து எனக்கு முழுமையாக தெரியாது. அவர் ஷீத்தலை பிரேக் அப் செய்து கொண்டதற்கு பின்னார் பர்சனலான காரணங்கள் இருக்கலாம்.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.