கங்குவா தயாரிப்பாளர் ஆசையில் 10% ஆவது நிறைவேறியதா? என்ன சொல்கிறது கங்குவா வசூல்?
கங்குவா திரைப்படம் வெளியான 16 நாட்களில் இதுவரை மொத்தம் 104.45 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இது தயாரிப்பாளர் கங்குவா வசூல் மீது வைத்திருந்த நம்பிக்கையில் 5% தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 14ம் தேதி வெளியானது. பேன்டஸி ஆக்சன் படமாக இதனை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தான் சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.
மோசமான விமர்சனம்
பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட கங்குவா படம், பெரிதளவில் மக்களை ஈர்த்து 2000 கோடி வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளியான முதல் நாளில் இருந்த படம் குறித்து முழுவதும் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வெளியானது. சூர்யாவின் நடிப்பை பாராட்டிய மக்கள் படத்தை மிகவும் மோசமாக விமர்சித்தனர்.
முதல் நாள் மட்டுமே வசூல்
இதனால், கங்குவா படம் முதல் நாளைத் தவிர வெளியான வேறு எந்த நாளும் 6 கோடிக்கு மேல் வசூலை எட்டவில்லை. அத்துடன், அவை படிப்படியாக குறைந்து 1 கோடி ரூபாய் வசூல் கூட இல்லாமல் மிகவும் மோசமான சரிவை சந்தித்தது. இதனால், தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் சில முக்கிய முடிவை எடுத்தனர்.