Emergency Trailer: இந்திரா காந்தியாக கங்கனா..இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் - அதிரவைக்கும் எமர்ஜென்சி ட்ரெய்லர்
Emergency trailer: இந்திரா காந்தியாக கங்கனா ரணவத் நடித்து, இயக்கி, இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என இந்தியாவின் எமர்ஜென்சி காலத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படமான எமர்ஜென்சி பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்திரா காந்தியாக கங்கனா, அதிரவைக்கும் எமர்ஜென்சி ட்ரெய்லர்
பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக எமர்ஜென்சி உள்ளது. இந்தியாவில் 1970 காலகட்டத்தில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆட்சியின்போது பிரகடனப்படுத்திய எமர்ஜென்சி கால உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் இந்திரா காந்தியாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடித்துள்ளார். அத்துடன் படத்தை தனது மணிகர்னிகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ளார்.
படத்தில் அனுபம் கெர், ஸ்ரேயாஸ் தல்படே, விசாக் நாயர் மற்றும் மிலிந்த் சோமன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் டிரெய்லர் 'ஜனநாயக இந்தியாவின் இருண்ட காலங்களின்' ஒரு பார்வையைக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.