Kanaa Kaanum Kaalangal: இளசுகளின் பேவரிட்..கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன்! ஹாட்ஸ்டார் சர்ப்ரைஸ் அறிவிப்பு-kanaa kaanum kaalangal disney hotstar announces third season the campus web series - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kanaa Kaanum Kaalangal: இளசுகளின் பேவரிட்..கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன்! ஹாட்ஸ்டார் சர்ப்ரைஸ் அறிவிப்பு

Kanaa Kaanum Kaalangal: இளசுகளின் பேவரிட்..கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன்! ஹாட்ஸ்டார் சர்ப்ரைஸ் அறிவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 08, 2024 04:34 PM IST

இளசுகளின் பேவரிட் ஆக திகழும் கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன் குறித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் ஹார்ஸ்டார் ஸ்பெஷலாக சத்யராஜ் நடிப்பில் மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் என்ற சீரிஸும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இளசுகளின் பேவரிட் கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன் குறித்து ஹாட்ஸ்டார் சர்ப்ரைஸ் அறிவிப்பு
இளசுகளின் பேவரிட் கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன் குறித்து ஹாட்ஸ்டார் சர்ப்ரைஸ் அறிவிப்பு

கனா காணும் காலங்கள் டிவி சீரியல்

கடந்த 2006இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் கனா காணும் காலங்கள். ஸ்கூல் வாளகத்தில் இரு எதிர் தரப்பு மாணவர்களு கேங்குகள் இடையிலான வாழ்க்கையை மையப்படுத்தி தொடர் அமைந்திருந்தது. மாணவர்களுக்கு இடையிலான நட்பு, காதல், எதிர்காலம் போன்றவற்றை எதார்த்தமான காட்சி அமைப்புடன் எடுத்துக்காட்டிய இந்த தொடர் இளைஞர்களிண் பேவரிட்டாகவும் மாறியது.

இந்த தொடர் ரீபூட் செய்யப்பட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் ப்ரீமியர் செய்யப்பட்டது. இந்த தொடருக்கு மீண்டும் கிடைத்த வரவேற்பு காரணமாக இதன் இரண்டாவது சீசன் உருவாக்கப்பட்டது. கனா காணும் காலங்கள் சீசன் 2, கடந்த 2023 ஏப்ரல் 21 முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.

புதிய சீசன் அறிவிப்பு

இதைத்தொடர்ந்து இளசுகளின் மனம் கவர்ந்த கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு சீசன்களை போலவே இளமை ததும்ப பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, சவால், நட்பு போன்றவற்றை சுற்றி கதை இருக்கும் என தெரிகிறது. இந்த புதிய சீசனிலும் முற்றிலும் புது முகங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இதில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் வெளியிடப்படும் எனவும், ரிலீஸ் தேதியும் தெரிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கனா காணும் காலங்கள் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள்

இதுவரை இரண்டு சீசன்கள் இந்த தொடர் ஒளிபரப்பாகி இருக்கும் நிலையில், முதல் சீசன் 132 எபிசோடுகளும், இரண்டாவது சீசன் 112 எபிசோடுகளையும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த சீரிஸில் தோன்ற ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்களாக தேஜா வெங்கடேஷ், ராஜா வெற்றி பிரபு, அரவிந்த் செய்ஜு, தீபிகா வெங்கடாசலம், ஆசிக் கோபிநாத் போன்றோர் இருக்கிறார்கள். இதில் துணை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சங்கீதா, இர்பான், ராஜேன், பரத் குமார், தீபிகா தாமு, அக்சிதா அஜித், பிரனிகா, பிரகதீஷ், ஏகன், விஜே கல்யாணி, சுரேந்தர் கேபிஒய், பர்வேஸ் முஸ்ரஃப் போன்றோரும் பிரபமானவர்களாக உள்ளார்கள்.

தற்போது கனா காணும் காலங்கள் முந்தைய சீசன்கள் அனைத்தும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. இதுவரை பார்க்காதவர்கள், இளமை துள்ளலுடன் இருக்ககூடிய இந்த கமிங் ஏஜ் தொடரை பார்த்து ரசிக்கலாம்

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்

இதேபோல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் என்ற பெயரில் புதிய வெப் தொடர்களும் அடுத்தடுத்து வெளியாக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம். அதன் தற்போது யோகி பாபு, வாணி போஜன், கயல் சந்திரன் உள்பட பலர் நடித்திருக்கும் சட்னி சாம்பார், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்திருக்கும் உப்பு புளி காரம் போன்ற சீரிஸ்கள் ஸ்டிரீம் ஆகி வருவதுடன், அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இதுதவரி சத்யராஜ் நடிப்பில் மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் என்ற சீரிஸும் விரைவில் வெளியாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.