Kamal Hassan: ‘நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது..’ - சரத்பாபு மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல்
நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது என சரத்பாபு மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சரத்பாபு. தமிழ் திரைத்துறையின் மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் திரைப்படத்தின் மூலம் 1971 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணம் செய்த இவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். தமிழ் தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் இவர் நடித்து உள்ளார்.
கடந்த சில மாதங்களாக அவரின் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதனிடையே சரத்பாபு இன்று ( மே 22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சரத்பாபு மறைவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சரத்பாபு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
அதில், ”சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி" என்று வருத்தமாக பதிவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்