KH 233: சம்பவம் இருக்கு.. கையில் தீப்பந்தம்.. கமல் ஹாசனின் மீரட்டும் 233 ஆவது பட அப்டேட்
நடிகர் கமல் ஹாசனின் 233 ஆவது பட அப்டேட் வெளியாகி உள்ளது.

கமல் ஹாசனின் 233 ஆவது பட அப்டேட்
நடிகர் கமல் ஹாசன் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனால் இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்கவே கமல் ஹாசன் அதிகமாக விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அதன்படி பல முன்னணி இளம் இயக்குநர்களிடம் அவர் தனது அடுத்த திரைப்படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இதனிடையே கமல் ஹாசனின் 233 வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அவரின் அடுத்த திரைப்படத்தை துணிவு திரைப்பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.