Manjummel Boys: ‘33 ஆண்டுகளுக்கு பிறகு கிடைச்ச மரியாதை; ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் பார்த்து கமல் அழுதுட்டார்' -சந்தானபாரதி
நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சென்று குகை ஒன்றில் சிக்கிக்கொள்வதும், அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்திற்கு மக்களிடம் அமோகவரவேற்பு கிடைத்து வருகிறது. பல பிரபலங்களும் இந்தப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சென்று குகை ஒன்றில் சிக்கிக்கொள்வதும், அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
குறிப்பாக, இந்தப்படத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தை சிறப்பு செய்யும் வண்ணம், அந்தப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடலை, படத்தின் முக்கியமான இடமொன்றில் புகுத்தி இருந்தார்கள். அது மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. கமல்ஹாசனும் படக்குழுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தப்படத்தை பார்த்து கமல்ஹாசன் அழுது விட்டதாக குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ சிலர் குணா படத்தில் இடம் பெற்ற சில விஷயங்கள் இந்தப்படத்தில் இருப்பதாக சொன்னார்கள். அதனைதொடர்ந்துதான் நான் இந்தப்படத்தை பார்த்தேன். எனக்கு திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது.
கிளைமாக்ஸில் குணா படத்தில் இடம் பெற்ற பாடல் வந்த போது மொத்த திரையரங்கமே ஆர்ப்பரித்து கைத்தட்டியது. மிகவும் நெகிழ்ச்சிகரமான அந்த மொமண்டில் நான் அழுது விட்டேன்.
கிட்டதட்ட 33 வருடங்களுக்கு பிறகு குணா படத்திற்கான மரியாதை கிடைத்தது போல உணர்ந்தேன். படத்தை பார்த்த கமல்ஹாசனும் அழுது விட்டார். நாங்கள் அதனை படமாக்கும் போது, இந்தளவு ரிஸ்க் இருக்குமா? என்பதை நாங்கள் உணரவில்லை. ஆனால் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்க்கும் போது, நாங்கள் உண்மையில் இவ்வளவு பெரிய ரிஸ்கை எடுத்து இருக்கிறோமா என்று தோன்றியது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்