63 Years of Parthiban Kanavu: பொன்னியின் செல்வன் கிளைக்கதை - தமிழ் தவிர சிங்கள மொழியிலும் உருவான வரலாற்று படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  63 Years Of Parthiban Kanavu: பொன்னியின் செல்வன் கிளைக்கதை - தமிழ் தவிர சிங்கள மொழியிலும் உருவான வரலாற்று படம்

63 Years of Parthiban Kanavu: பொன்னியின் செல்வன் கிளைக்கதை - தமிழ் தவிர சிங்கள மொழியிலும் உருவான வரலாற்று படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 03, 2023 11:45 AM IST

பொன்னியின் செல்வன் கிளைக்கதையாக அமரர் கல்கி எழுதிய பார்த்தபன் கனவு நாவல் அதே பெயரில் பிரமாண்ட திரைப்படமாக வெளியாகி போதிய வரவேற்பை பெறாமல் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் இதில் நடித்த ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, சரோஜா தேவி ஆகியோருக்கு நல்ல பெயரும், புகழும் கிடைத்தது.

பொன்னியின் செல்வன் கிளைக்கதையான பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன் கிளைக்கதையான பார்த்திபன் கனவு

எழுத்தாளர் கல்கி எழுதிய சரித்திர நாவல்களில் ஒன்று பார்த்திபன் கனவு, 1941 முதல் 1943 வரை கல்கி வார இதழில் தொடராக வந்தது. பொன்னியின் செல்வன் கிளை கதையாக, சோழ அரசன் பார்த்திபனின் மகன் விக்கிரமனை பிரதானமாக கொண்டு வரலாற்று பின்புலத்தில் புனையப்பட்ட இந்த கதை, பின்பு நாவலாக வெளியானது.

இதை அடிப்படையாக வைத்தது 1960இல் இதே பெயரில் யேகானந்த இயக்க, ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, சரோஜா தேவி பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க திரைப்படமாக உருவாக்கினார்கள்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, சிங்கள ஆகிய மொழிகளில் இதை படமாக எடுத்தனர். பொன்னியின் செல்வன் படத்தில் வரும் அரசிலன்குமாரியான த்ரிஷாவின் பெயர் குந்தவை. அதைப்போல் இந்தப் படத்தில் அரசிலன்குமாரியாக நடித்திருக்கும் வைஜெயந்தி மாலாவின் பெயரும் குந்தவை தான்.சரோஜா தேவி கெளரவ நடிகையாக சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார்.

ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாக இருந்த சோழ பேரரசு பல்லவர்களுக்கு அடிமையாகி, சிறிய நிலப்பரப்பில் இயங்கி வருகிறது.

பல்லவ மன்னன் நரசிம்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன் அவனை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைகிறான். பின்னர் சோழ நாடு எப்படி பார்த்திபனின் மகன் விக்கிரமனின் பராக்கிரமத்தால் விடுதலை அடைந்தது என்ற கதையில் பார்த்திபன் கனவு படம் அமைந்திருக்கிறது.

வரலாற்று படம் என்பதால் செலவில் எந்த வித குறையும் இல்லாமல் படத்தை மிக பிரமாண்டமாகவே உருவாக்கினர் படத்தின் தயாரிப்பாள் ஜூப்லே பிலிம்ஸ். மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரானதால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்த இந்தப் படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்தது.

பின்னர் 1960, ஜுன் 3இல் வெளியான இந்தப் படம் ரசிகர்களை பெரிய அளவில் ஈரக்கவில்லை. இதனால் வசூலிலும் பெருத்த ஏமாற்றத்தை தந்தது. ஆனால் படத்தில் நடித்த ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, குறிப்பாக சரோஜா தேவிக்கு நல்ல பெயரை பெற்று தந்ததது.

மன்னராக நடித்த ரங்கா ராவ், அசோகன் ஆகியோரின் நடிப்பும் வெகுவாக பாராட்டுகளை பெற்றது. இந்த படம் தொடங்கும்போது வைஜெயந்தி மாலா தோழியாக நடித்திருந்த சரோஜா தேவி, படம் முடிவதற்குள் நல்ல ஸ்டார் அந்தஸ்தை பெற்றதால் அந்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளிவந்த போதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போன பார்த்திபன் கனவு வெளியாகி இன்றுடன் 63 ஆண்டுகள் ஆகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.