தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalki 2898 Ad Trailer: இது கமல்ஹாசனா? மிரட்டும் கிராஃபிக்ஸ்.. கலக்கும் பிரபாஸ்!- கல்கி ட்ரெயிலரில் என்ன ஸ்பெஷல்?

Kalki 2898 AD trailer: இது கமல்ஹாசனா? மிரட்டும் கிராஃபிக்ஸ்.. கலக்கும் பிரபாஸ்!- கல்கி ட்ரெயிலரில் என்ன ஸ்பெஷல்?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 10, 2024 09:02 PM IST

Kalki 2898 AD trailer: பிரபாஸின் கதாபாத்திரமும் ரொம்பவும் சீரியஸாக இல்லாமல், நகைச்சுவை கலந்த பாணியில் எழுதபபட்டிருப்பதாக தெரிகிறது. அது டீசரை போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறது. - கல்கி ட்ரெயிலரில் என்ன ஸ்பெஷல்?

Kalki 2898 AD trailer: இது கமல்ஹாசனா? மிரட்டும் கிராஃபிக்ஸ்.. கலக்கும் பிரபாஸ்!- கல்கி ட்ரெயிலரில் என்ன ஸ்பெஷல்?
Kalki 2898 AD trailer: இது கமல்ஹாசனா? மிரட்டும் கிராஃபிக்ஸ்.. கலக்கும் பிரபாஸ்!- கல்கி ட்ரெயிலரில் என்ன ஸ்பெஷல்?

ட்ரெண்டிங் செய்திகள்

ட்ரெய்லரில் என்ன இருக்கிறது?

இந்த உலகின் கடைசி நகரம் காசி கூவும் சிறுவனின் குரலோடு தொடங்கும் டீசரில், அந்த சிறுவன் அமிதாப்பை நோக்கி நீங்கள் வெளியே இருந்தால்,பல பேரை காப்பாற்றலாம் என்று கூற, அவரோ நான் காப்பாற்ற வேண்டியது ஒருவனை மட்டும்தான் என்கிறார். இதற்கிடையே தீபிகா கர்ப்பமாக இருப்பதை காண்பிக்கிறார்கள். இதன் மூலம் அந்த குழந்தையைத்தான் அமிதாப் சொல்கிறார் என்பது தெரிகிறது. 

அதனை தொடர்ந்து செல்லும் டீசரில் இருந்து எதிரிகூட்டம் பிராபாஸை அனுப்பி வைத்து, தீபிகாவை அழைத்து வர சொல்வது போல தெரிகிறது. இதனையடுத்து டிஸ்டோபியன் உலகில் பிரபாஸ் புஜ்ஜி காரில் செல்கிறார் என்று தெரிகிறது. இதனையடுத்து எதிரிகூட்டத்திற்கும், அமிதாப் தரப்பிற்கும் இடையே நடக்கும் சண்டைகள் காண்பிக்கப்படுகின்றன. அவை அனைத்தும் முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ் காட்சிகளால் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. அவை அனைத்து தத்ரூபமாக இருக்கின்றன. 

கூடவே பிரபாஸின் கதாபாத்திரமும் ரொம்பவும் சீரியஸாக இல்லாமல், நகைச்சுவை கலந்த பாணியில் எழுதபபட்டிருப்பதாக தெரிகிறது. அது டீசரை போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறது. இறுதியில் கமல்ஹாசன் தோன்றுகிறார். அவரது தாத்தா உருவம் பிரமிக்கவைக்கிறது. அவர் பயப்படாதே புது பிரபஞ்சம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டீசருக்கு ஒன்றிப்போகின்ற பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.

முந்தைய அம்சங்கள்

கடந்த மாதம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) இடையேயான பரபரப்பான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியின் போது, இந்தப்படத்திலிருந்து அமிதாப் பச்சனின் தோற்றத்தின் டீஸரை தயாரிப்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர். 

அதனை தொடர்ந்து, ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கல்கி 2898 AD- திரைப்படத்துக்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ’’புஜ்ஜி’’ என்ற வாகனம் குறித்த வீடியோ மற்றும் தகவல்களை வெளியிட்டதிலிருந்து, அந்த வாகனம் தொடர்பான செய்தி இணையதளங்களில் ஆக்கிரமித்தது.

இந்த பிரத்யேக காரை நடிகர் நாக சைதன்யா மற்றும் எஃப் 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஆகிய இருவரும் ஓட்டி சோதனை செய்தனர். இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கினை ஓட்டிப்பார்க்க, அழைப்பு விடுத்துள்ளார். இந்த ’புஜ்ஜி’ சிறப்புக் காரை, சென்னை மகேந்திரா நிறுவனமும், கோவையிலுள்ள ஜெயம் மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துக் கொடுத்து இருந்தது.

கல்கி கி.பி 2898 திரைப்படம் பற்றி:

இந்தப்படத்தில் கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே, தீபிகா பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்