Kadhal Sukumar: ரூமில் அடித்து சட்டையைக் கிழித்த வடிவேலு.. கண்ணீராய் மாறிய காகிதம்.. காத்திருந்து காவு வாங்கிய சுகுமார்!
தன்னை ரூமில் இருந்து வைத்து அடித்ததிற்காக வடிவேலுவை தான் எப்படி பழிவாங்கினேன் என்பது குறித்து காதல் சுகுமார் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ வடிவேலு சாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் என்னை பார்க்க ஆசைப்படுவதாகவும் கூறி எனக்கு செய்தி வந்தது. இதனையடுத்து மிகவும் ஆர்வமாக ஒரு பூங்கொத்தை வாங்கிக்கொண்டு வடிவேல் சாரை மருத்துவமனையில் சென்று சந்தித்தேன்.
இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அவரை, என்ன முன்மாதிரியாக பார்த்து வளர்ந்தேன் உள்ளிட்டவற்றை பற்றி பகிர்ந்தேன். நன்றாக பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் திடீரென்று தம்பி என்னை போலவே நடிப்பேன் என்று சொல்லி சினிமா கம்பெனிகளில் வாய்ப்பு கேட்கிறாயாமே என்று கேட்டார்.
உடனே அதற்கு நான் அய்யோ அண்ணன் அப்படியெல்லாம் இல்லையே…என்று சொன்னேன். உடனே அவர்.. இல்லை கேட்டிருக்கிறாயே.. அதைச் சொல்லி ஒரு படமும் வெளியாகி இருக்கிறதே என்று சொன்னார்.
உடனே நான் அது ஏதோ எதிர்பாராத விதமாக செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் இனி செய்ய மாட்டேன் என்று சொன்னேன். உடனே அவர் ஒரே ஊர்காரர்களாக இருந்து கொண்டு அப்படி எல்லாம் செய்யக்கூடாது தம்பி என்று சொன்னார். உடனே நான், அண்ணே… நான்தான் இனி பண்ண மாட்டேன் என்று சொல்கிறேனே என்று குரலை உயர்த்தினேன்.
உடனே பின்னால் இருந்து ஒரு அரை விழுந்தது. இளம் வயது என்பதால் சுருக்கென்று கோபம் வந்து விட்டது. பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஏன் அடிக்கிறீர்கள் என்று கோபமாக அடித்தவரிடம் கேட்டேன். அதில் இன்னும் கோபமான அவர் சாத்து சாத்து என்று சாத்தினார்.
இதைப் பார்த்த வடிவேலு ஒரு கட்டத்தில் அடிக்காதீர்கள் என்று தடுத்தார். இவர்களெல்லாம் மிகவும் கோபக்காரர்கள் என்று என்னை எச்சரித்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். என்னுடைய சட்டையெல்லாம் கிழிந்து விட்டது.
நான் அவர்களிடம் இப்படியே நான் டிவியில் உட்கார்ந்து இங்கு நடந்ததை சொல்லி விடுவேன் என்று எச்சரித்தேன். இதனைக்கேட்ட அவர்கள் மீண்டும் என்னை சாத்து சாத்து என்று சாத்தினர். அத்தோடு, என்னிடம் ஒரு பேப்பரில் வடிவேலுவிடம் நான் உதவி கேட்டு வந்ததாகவும், அதற்கு அவர் பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் எழுதி அதில் கையெழுத்து போடச் சொன்னார்கள். இன்னும் அந்த லெட்டர் அவரிடம் இருக்கிறது.
அதன் பின்னர் நான் நடித்த காதல் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில் தான் நான் கொஞ்சம் பிரபலமானேன். ஏவிஎம் ஸ்டுடியோவில் கிட்டத்தட்ட நான்கு படங்களின் பூஜையானது நடந்து கொண்டிருந்தது. வடிவேலுவின் மிகப் பிரபலமான காமெடியான ‘சிங்கம் களம் இறங்கிடுச்சு’ என்ற காமெடியானது அங்கு எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதே ஸ்டூடியோவில் என்னுடைய படத்தின் ஷூட்டிங் நடந்தது.
அப்போது வடிவேல் இயக்குநர் ராஜ்குமாரின் தோள் மீது கை போட்டுக்கொண்டு அங்கிருந்து வந்தார். அப்போது நான் அந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்திற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். அவரைப் பார்த்தவுடன் அங்கிருந்து எல்லோரும் எழுந்தார்கள். ஆனால் நான் எழுந்திருக்கவில்லை. கால் மீது கால் போட்டுக்கொண்டு டச்- சப் செய்தேன். இதைப் பார்த்த அவர் நேரடியாக வருவதை தவிர்த்து, திடீரென்று கட் செய்து வேறு பக்கமாக சென்றுவிட்டார்.” என்று பேசினார்.
நன்றி: பிஹைண்ட் டாக்கீஸ்!
டாபிக்ஸ்