Jyothika latest interview: ‘என்ன நடந்தாலும்… சாதி பயம்.. கேரியரில் வந்த உணவு’ - புகுந்த வீடு பற்றி ஜோதிகா ஓப்பன் டாக்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jyothika Latest Interview: ‘என்ன நடந்தாலும்… சாதி பயம்.. கேரியரில் வந்த உணவு’ - புகுந்த வீடு பற்றி ஜோதிகா ஓப்பன் டாக்!

Jyothika latest interview: ‘என்ன நடந்தாலும்… சாதி பயம்.. கேரியரில் வந்த உணவு’ - புகுந்த வீடு பற்றி ஜோதிகா ஓப்பன் டாக்!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 27, 2023 05:30 AM IST

“சூர்யா வீட்டுக்குள் நான் நுழையும் பொழுது, அந்த வீட்டிற்கு தகுந்தார் போல என்னை மாற்றிக் கொண்டேன். என்னதான் நடந்தாலும் நான் இங்கு தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டுதான் மணமகளாக அந்த வீட்டிற்குச் சென்றேன்.” என்று பேசினார்.

ஜோதிகா பேட்டி!
ஜோதிகா பேட்டி!

அவர் பேசும் போது, “ புகுந்த வீட்டுக்குச் செல்லும் எல்லா பெண்களுக்கும் சாதி ரீதியான பயம் உட்பட பலவை இருக்கும். அந்த பயம் எனக்கும் இருந்தது. 

அப்போது எனக்கு தமிழ் கூட ஒழுங்காக தெரியாது. ஆனால், அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்தது. சூர்யாவின் அம்மா தான் அப்போது வீட்டில் இருந்தார். அவருடன் தான் நான் நிறைய பேசுவேன். 

அவர் வீட்டில் உள்ள அனைவரையும் அவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொள்வார். நாங்கள் ஒருவருக்கொருவர் அப்படியே ஒன்றிணைந்து விட்டோம். பொதுவாக நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பொழுது தயாரிப்பு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட உணவை சாப்பிடுவேன் அல்லது எனக்கான உணவை ஆர்டர் செய்து கொள்வேன்.

அப்படித்தான் நான் கல்யாணம் முடிவதற்கு முன்பு வரை இருந்தேன். ஆனால் கல்யாணம் முடிந்த பின்பு என்னுடைய அத்தையே எனக்கு சாப்பாட்டை தயார் செய்து கேரியரில் அனுப்புவார். அந்த வழக்கம் முன்பாக சூர்யாவிற்கும், சிவகுமார் அப்பாவிற்கும் இருந்தது. என்னுடைய அம்மாவும், சூர்யாவுடைய அம்மாவும் மிகவும் நெருக்கமானவர்கள். 

ஆனால் நான் கொஞ்சம் எதிர்மறையாக நினைத்து வைத்திருந்தேன். சூர்யா வீட்டுக்குள் நான் நுழையும் பொழுது, அந்த வீட்டிற்கு தகுந்தார் போல என்னை மாற்றிக் கொண்டேன். என்னதான் நடந்தாலும் நான் இங்கு தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டுதான் மணமகளாக  அந்த வீட்டிற்குச் சென்றேன்.” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.