பிக் பாஸ் பயணம் எப்படி இருந்தது ? - ஜூலி பதில்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிக் பாஸ் பயணம் எப்படி இருந்தது ? - ஜூலி பதில்!

பிக் பாஸ் பயணம் எப்படி இருந்தது ? - ஜூலி பதில்!

Aarthi V HT Tamil
Apr 10, 2022 07:15 PM IST

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற ஜூலி தனது பயணம் எப்படி இருந்தது என தெரிவித்து உள்ளார்.

<p>ஜூலி</p>
<p>ஜூலி</p>

கடந்த வாரம் சுருதி 15 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியே சென்ற நிலையில் ஜூலி , அபிராமி , பாலாஜி, ரம்யா பாண்டியன், நிரூப், தாமரை ஆகிய 6 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதாக கருதப்பட்டது . ஆனால் திடீரென ஜூலி மற்றும் அபிராமியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் நிரூப் , தாமரை , ரம்யா பண்டியன் , பாலாஜி ஆகியோர் பைன்ஸ் ஃலிஸ்டாக சென்று இருக்கின்றனர்.

ஜூலி கடந்த சீசனில் மிகவும் எதிர்மறையான கருத்துகளை பெற்றார் . இந்த பிக் பாஸ் ஐந்து சீசன்கள் கடந்தாலும் ஜூலி பெயர் மட்டும் மாறாமல் இருந்தது . ஆனால், அந்த சீசனில் இவரது பெயர் கடுமையாக டேமேஜ் ஆனத . அந்த பெயரை மாற்றிக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார் .

அவர் நினைத்தது போல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்றது . அதனால் ஜூலி , இமேஜும் மாறியது . ஜூலிக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவானது . அவர் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் திடீரென அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டது முற்றிலும் தவறான ஒன்று என சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் செய்யப்பட்டது .

இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பட்ட ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார் . அதில் , “வெற்றி என்பது நீங்கள் இறுதியில் பெறுவதை விட குறைவாக இருந்து இருக்கலாம் . ஆனால் அந்த பயணத்தில் நீங்கள் என்னவாக மாறி இருக்கிறீர்கள் என்ற விஷயம் தான் பெரியது ” எனக் குறிப்பிட்டு உள்ளார் .

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.