தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jr Ntr On Ntr: தாத்தாவிற்கு அஞ்சலி; தரையில் அமர்ந்த ஜூனியர் என்.டி.ஆர்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள் - வைரல் வீடியோ!

Jr NTR on NTR: தாத்தாவிற்கு அஞ்சலி; தரையில் அமர்ந்த ஜூனியர் என்.டி.ஆர்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள் - வைரல் வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
May 28, 2024 01:06 PM IST

Jr NTR on NTR: தாத்தாவிற்கு அஞ்சலி செலுத்திய த ஜூனியர் என்.டி.ஆரை பார்த்து ஆர்ப்பரித்த ரசிகர்கள் - வைரல் வீடியோ

Jr NTR on NTR: தாத்தாவிற்கு அஞ்சலி; தரையில் அமர்ந்த ஜூனியர் என்.டி.ஆர்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள் - வைரல் வீடியோ!
Jr NTR on NTR: தாத்தாவிற்கு அஞ்சலி; தரையில் அமர்ந்த ஜூனியர் என்.டி.ஆர்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள் - வைரல் வீடியோ!

ட்ரெண்டிங் செய்திகள்

ஜூனியர் என்.டி.ஆர், சகோதரர் என்.டி.ஆருக்கு அஞ்சலி

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில், என்.டி.ராமராவின் நினைவிடத்திற்கு ஜீனியர் என்.டி.ஆரும், அவரது சகோதரர் கல்யாண் ராமும் வருகின்றனர். முதலில் கல்யாண்ராம் அஞ்சலி செலுத்த, பின்னர் தாத்தாவை கையெடுத்து வணங்கிய ஜூனியர் என்.டி.ஆர் மலர்களை தூவியும், மலர்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினார். 

தரையில் அமர்ந்த என்.டி.ஆர்

இன்னொரு வீடியோவில் தாத்தாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இருவரும் தரையில் சிறுது நேரம் அமர்ந்து இருக்கின்றனர். ஜூனியர் என்.டி.ஆர் வருவதையறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அந்த இடம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து அவர்கள் ஜூனியர் என்.டி.ஆர் என்ற கோஷங்களை தொடர்ந்து எழுப்பி கொண்டிருந்தனர்.

முன்னதாக, தமிழ்நாடு அரசியலிலும் சினிமாவிலும் எம்ஜிஆர் எப்படி முடிசூடா மன்னனாக இருந்தாரோ அதே போல் அண்டை மாநிலமான ஆந்திராவில் சினிமாவிலும், அரசியலிலும் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் நந்தமூரி தாரக ராமராவ் எனும் என்டிஆர். ஆந்திர மக்களின் மனதில் கடவுளாக வாழ்ந்த தலைவர் இவர். தமிழ்நாட்டில் எம்ஜிஆர் இருந்தது போல ஆந்திர மாநிலத்தில் திரையுலகில் இருந்து அரசியல் வாழ்க்கையில் பயணம் செய்தவர் என்டிஆர்.

சினிமா 

மனதேசம் என்ற திரைப்படத்தில் காவல் அதிகாரியாக 1949 ஆம் ஆண்டு திரையுலகில் தடம் பதித்தார். பாதாள பைரவி என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமடையத் தொடங்கி ஆகப்பெறும் நாயகனாக உருவெடுத்தார். ’மாயா பஜார்’ என்ற திரைப்படத்தின் மூலம் கிருஷ்ணனாக நடித்த என்டிஆர், அதற்குப் பிறகு வந்த அனைத்து படங்களிலும் கிருஷ்ண பரமாத்மாவாக மக்களிடத்தில் தோன்றினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படத்திலும் இவரே கிருஷ்ண பரமாத்மாவாக நடித்திருப்பார். ஒருவேளை உண்மையில் கிருஷ்ண பரமாத்மா இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் போல என மக்களின் மனதில் கடவுளாகப் பதிந்தார்.

அரசியல்

தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த என்டிஆர் 1980 ஆம் ஆண்டு திருவிழா வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டார். திரைத்துறையில் இருக்கும் சிக்கல்களுக்கு எதிராகக் குரல்களைக் கொடுத்து அதனை நிவர்த்தி செய்யக் கடமையாக முயற்சி செய்தவர் என்டிஆர். அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்களிடம் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியைத் தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் சைதன்ய ரதம் என்று பெயரிடப்பட்ட வேனில் பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாகச் சந்தித்தார்.

பின்னர் 1983 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் பத்தாவது முதலமைச்சராக அரியணையில் என்டிஆர் அமர்ந்தார். 1994 ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாத சக்தியாக மூன்று முறை முதலமைச்சர் பதவியைத் தன்வசம் வைத்திருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக மாரடைப்பால் 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அன்று தனது 72 வயதில் என்டிஆர் காலமானார்.

வெங்கையா நாயுடு, சந்திரபாபு நாயுடு அஞ்சலி

இவரது 101 ம் நினைவுநாளை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். என்.டி.ஆரின் மகள் டி.புரந்தேஸ்வரியும், என்.டி.ஆரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். 

என்.டி.ஆரை "இதயத் துடிப்பு" மற்றும் "தெலுங்கு மக்களின் சுயமரியாதையின் சின்னம்" என்று விவரித்த வெங்கையா நாயுடு,  புராண வேடங்களில் நடித்ததற்காக ஒரு நடிகராக பாராட்டுக்களைப் பெற்றார், மேலும் அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தையும் அறிமுகப்படுத்தினார் என்றார். 

ஜூனியர் என்.டி.ஆர் பற்றி

ஜூனியர் என்.டி.ஆர் அடுத்ததாக தேவாரா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சைஃப் அலிகான் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்கத்தில் வார் 2 என்ற படமும் நடித்து வருகிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்