Amala Paul: தனுசுடன் கேரவனில்.. வேலி இல்லாத பயிர்.. அடைய துடித்த ஓநாய்கள்.. சர்ச்சையோ சர்ச்சை! - அமலாபால் கதை
Amala Paul: அந்த கேரக்டருக்காக படக்குழுவினர் வேறு சில ஹீரோயின்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அமலா பால் தான் படப்பிடிப்பில் தனுசை சந்தித்து, கேரவனில் கிட்டத்தட்ட 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார். வெளியே வரும் போது அவர்தான் நாயகி என்ற பேருடன் வந்தார். - அமலா பால் கதை
Amala Paul: அமலாபால் சந்தித்த சர்ச்சைகள் குறித்து பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “சினிமாவைப் பொறுத்தவரை கிளாமராக நடித்தால்தான், கிளாமரான போட்டோக்களை வெளியிட்டால்தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கிறது. அதன்படி தான் அமலாபாலும் களமிறங்கினார். சிந்து சமவெளி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் அவர் மைனா திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அவரது சினிமா கேரியரும் அடுத்த கட்டத்திற்கு சென்றது. அதன் பின்னர் பல முக்கியமான படங்களில் அமலாபால் இடம் பெற்றார். அந்த வகையில் அவர் நடித்த தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றன.
தனுசுடன் நடித்த வேலையில்லா பட்டதாரி
அவரது சினிமா கேரியரில் தனுசுடன் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பேர் வாங்கி கொடுத்தது. அதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. உண்மையில் வேலையில்லா பட்டதாரியில் அமலா பால் முதலில் கதாநாயகியாக கமிட் செய்யப்படவில்லை. அந்த கேரக்டருக்காக படக்குழுவினர் வேறு சில ஹீரோயின்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அமலா பால் தான் படப்பிடிப்பில் தனுசை சந்தித்து, கேரவனில் கிட்டத்தட்ட 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார். வெளியே வரும் போது அவர்தான் நாயகி என்ற பேருடன் வந்தார்.
அந்தப் படத்தில் அவர் தனுஷூடன் நெருக்கமாக நடித்ததும் பேசுபவர்களாக மாறியது. இதற்கிடையே இயக்குநர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், அவருடன் விவாகரத்து செய்து கொண்டார். அதற்கு முக்கியமான காரணம் அமலா பால் கல்யாணத்திற்கு பின்னரும் நான் நடிப்பேன் என்று கூறியதுதான். இயக்குநர் விஜய் செட்டிநாட்டு குடும்பத்தை சேர்ந்தவர். செட்டிநாட்டு குடும்பத்தை பொறுத்த வரை, நிச்சயமாக அவர்கள் அந்த சமுதாயத்தில் உள்ள பெண்ணையும், அந்த சமுதாயத்தின் முறைப்படிதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
முறிந்து போன உறவு
ஆனால் விஜய் அதற்கு மாறாக அமலாபாலை திருமணம் செய்து கொண்டார். இன்னொரு விஷயம் செட்டிநாடு குடும்பத்தை பொறுத்தவரை கல்யாணத்திற்கு பிறகு பெண்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை முழுமையாக ஏற்று நடத்த வேண்டும். ஆனால் அதற்கும் அமலா பால் தயாராக இருக்கவில்லை இதனை எடுத்து தான் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது
ஒரு கட்டத்தில், வேலியில்லாத ஆடாக அவர் மாறிவிட்டார். இதையடுத்து அவரை அடைய வேண்டும் என்று பல பேர் துடித்தார்கள். அப்படி நிறைய பேர் அமலா பாலை அணுகினார்கள் ஆனால் ஒரு கட்டத்தில், அமலா பால் உஷாராகி அதிலிருந்து வெளியே வந்து விட்டார்” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்