தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gemini Ganesan: 80 வயதிலும் கட்டில் தேவை.. 4 மனைவிகள்.. 8 குழந்தைகள்.. ஜெமினி போட்ட காதல் களியாட்டங்கள்!

Gemini Ganesan: 80 வயதிலும் கட்டில் தேவை.. 4 மனைவிகள்.. 8 குழந்தைகள்.. ஜெமினி போட்ட காதல் களியாட்டங்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 28, 2024 06:57 AM IST

அப்போது ஜெமினி கணேசன் அம்மாவிடம், நான் டாக்டராக வேண்டும் என்று கனவு வந்திருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது, இப்போது கல்யாணம் வேண்டுமா என்று கேட்டிருக்கிறார்.

ஜெமினி கணேசன்!
ஜெமினி கணேசன்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “புதுக்கோட்டையில் பிறந்தவர் ஜெமினி கணேசன். தாம்பரத்தில் இருக்கக்கூடிய கிறிஸ்டியன் கல்லூரியில் தான் அவர் படித்தார். படித்து முடித்து விட்டு, அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்ற தொடங்கினார். 

இதற்கிடையே, அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதனையடுத்து, அவர் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை அங்கிருந்தே செய்து கொண்டிருந்தார்.  இந்த நிலையில்தான், ஜெமினி கணேசனின் அம்மா, அலமேலு என்ற பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார். 

அப்போது ஜெமினி கணேசன் அம்மாவிடம், நான் டாக்டராக வேண்டும் என்று கனவு வந்திருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது, இப்போது கல்யாணம் வேண்டுமா என்று கேட்டிருக்கிறார். 

இதையடுத்து அலமேலு அப்பா, அதாவது ஜெமினி கணேசனின் மாமனார், நான் உங்களை படிக்க வைக்கிறேன். தயவு செய்து என்னுடைய மகளை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல, ஜெமினி கணேசன் அலமேலுவை கல்யாணம் செய்து கொண்டார்.

கல்யாணம் செய்துகொண்ட ஒரு வருடத்தில், மாமனார் இறந்து விட்டார். ஜெமினி கணேசனின் டாக்டர் கனவும் தகர்ந்து போனது. அப்போது அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்திருந்தது.

இந்த நிலையில் தான் அவர் ஜெமினி ஸ்டுடியோவில் வந்து நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது கவர்ச்சி நடிகை புஷ்பவல்லிக்கும், ஜெமினி கணேசனுக்கும் காதல் மலர்ந்தது.

ஒரு கட்டத்தில் அந்த காதல் எல்லை மீறி, கட்டில் வரைக்கும் சென்றது. இதனையடுத்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஜெமினி கணேசன் அவரை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி, கடைசி வரை கல்யாணம் செய்து கொள்ளவே இல்லை.

மனம்போல் மாங்கல்யம் என்ற திரைப்படத்தில் நடிகை சாவித்ரியை ஜெமினி கணேசன் சந்திக்கிறார்.  13 வயதிலேயே சாவித்திரி இப்படிப்பட்ட பேரழகியாக இருக்கிறாரே என்று அவர் ஒரு நொடி உறைந்து போனார். 

இருவரும் பழக, பேச, பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. அந்த படத்தின் போதே இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள். முதல் மனைவிக்கு 4 குழந்தைகள், புஷ்பவல்லிக்கு 2 குழந்தைகள், சாவித்திரிக்கு 2 குழந்தைகள் என மொத்தம் 8 குழந்தைகள் ஆயின. 

நடிகை சாவித்திரியுடன் வாழ்ந்த காலத்திலேயே, ஜெமினி கணேசனுக்கு நடிகை ராஜஸ்ரீ உடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது. வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஜெமினி கணேசன் ராஜஸ்ரீயவே அழைத்து சென்று கொண்டிருந்தார். இதில் கோபம் கொண்ட சாவித்திரி, ஜெமினி கணேசன் உடனான உறவை முறித்துக் கொண்டார்

அவருக்கு 80 வயது இருக்கும் போது, மலேசியாவில் இருந்து வந்த ஜூலியா என்ற பெண்ணை காதலித்தார். அவரையும் திருமணம் செய்து கொண்டார். ஜூலியாவை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்த ஜெமினி கணேசன், பத்திரிக்கையாளர்களை அழைத்து அவரை அறிமுகப்படுத்தினார். 

பல படங்களில் அவருக்கு வாய்ப்புகள் வாங்கிகொடுக்க முயற்சி செய்தார். பொதுவாகவே ஜெமினி கணேசன் ஒரு கஞ்சன் என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால் பெண்கள் விஷயத்தில் அவர் தாராளமாக செலவு செய்வார்.

ஜூலியா விஷயம் குழந்தைகளுக்கு தெரிய வர, அவர்கள் ஜெமினி கணேசனை கண்டித்து, ஜூலியாவை பிரித்தனர்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்